தமிழ்க் கட்சிகளுக்கு ஆபத்தான 21 ஆவது திருத்த பிரேரணை

புதிய அர­சாங்­கத்தின் கொள்கை விளக்­க­வு­ரையை ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ வெள்ளிக்­கி­ழ­மை­யன்று பாரா­ளு­மன்றில் நிகழ்த்­தினார். அதில் பிர­தான இடம்பிடித்­தி­ருக்கும் விடயம் தற்போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்கள் செய்­யப்­படல் வேண்டும் என்­ப­தாகும். கடந்த அர­சாங்கம் கொண்டு வந்த 19ஆவது திருத்­தச்­சட்­டமே தற்போ­தைய பல சிக்­கல்­க­ளுக்குக் காரணம் என புதிய அர­சாங்­கத்தின்  அமைச்­சர்கள் அடிக்­கடி கூறி வருகின்­றனர்.அதில் திருத்­தங்கள் செய்­யப்­ப­டு­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜ­பக் ­ஷவால்  இரு தனி நபர் பிரேரணை­கள் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த இரண்டு பிரே­ர­ணை­களும் பாரா­ளு­மன்­றினால் வர்த்­த­மா­னி­யிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
 இதில் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு மிகவும் பாத­க­மான திருத்தச் சட்­ட­மாக 21 ஆவது திருத்தச் சட்ட பிரே­ரணை விளங்­கு­கி­றது. அதா­வது பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆச­னத்தை தக்க வைப்­ப­தற்கு குறித்த கட்­சிகள் மொத்­த­மாக 12.5 வீத­மான வாக்­கு­க­ளுக்கு அதி­க­மாகப் பெற்­றி­ருக்க வேண்டும் என்­பதே அந்த பிரே­ர­ணை­யாகும். அதா­வது குறிப்­பிட்ட தொகுதி ஒன்­றுக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்­கான மொத்த செல்­லு­ப­டி­யான வாக்கு வீதம் 5 ஆகவே இத்­தனை காலமும் இருந்தது. தற்­போது அது 12.5 வீத­மாக அதி­க­ரிக்­கப்­படல் வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

12.5 வீதம் என்­பது 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­புச்­ சட்­டத்தில் கொண்டு வரப்­பட்ட விடய­மாகும். எனினும் ஆர்.பிரே­ம­தா­ஸவின் ஆட்சி காலத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும்  முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாப­க­ரு­மான அமரர் எச்.எம்.அஷ்ரப்பின் வேண்­டு­கோளின் பேரில்  இது 5 வீத­மாக குறைக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக சிறு­பான்மை கட்­சிகள் பொதுத்­தேர்­தலில் தனித்து போட்­டி­யிட்டு  கணிச­மான ஆச­னங்­க­ளைப்­பெற பிர­தான தேசிய கட்­சிகள் அக்­கட்­சி­களின் ஆத­ர­வைப்­பெற்றே ஆட்­சி­ய­மைக்க வேண்­டிய நிலைமை இத்­தனை காலமும் இருந்து வந்­தது.  

எனவே இந்த நிலைமை மாற்­றி­ய­மைக்­கப்­படல் வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார் விஜே­தச ராஜ­பக் ஷ எம்.பி. இதன் மூலம் இனி சிறு­பான்மை கட்­சிகள் பல தனித்து போட்­டி­யிட முடி­யாத நிலைமை தோன்­றி­யுள்­ளது. தேசியக் கட்­சி­க­ளைப் ­பொ­றுத்­த­வரை மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கே இந்த பாதிப்பு அதிகம். ஏனெனில் இக்­கட்சி கூடு­த­லாக பொதுத் தேர்­தலில் தனித்தே போட்­டி­யிட விரும்பும். குறித்த தொகு­தியில் 10 வீத   வாக்­கு­க­ளைப்­பெற்­றி­ருந்­தாலும் கூட அக்­கட்­சி­யினால் உறுப்­பி­னர்­களை பெற முடி­யாது போகும்.
பாரா­ளு­மன்றில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான 113 ஆச­னங்­களை தேசியக் கட்­சிகள் தனித்து பெற முடி­யாமல் போவ­தற்கு  கடந்த காலங்­களில் அமுலில் இருந்த 5 வீத வாக்­கு­க­ளைப் ­பெறல் என்ற விட­யமே காரணம் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. தேசியக் கட்­சிகள் சிறு­பான்மை கட்­சி­க­ளிடம் தஞ்­ச­ம­டை­யத்­ தே­வை­யில்லை என்­பதை விஜே­தாச ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த பாதிப்பு மலை­யக கட்­சி­க­ளுக்கும் உள்­ளது என்­பதை ஏற்றுக்­கொள்ள வேண்டும்.  கடந்த காலங்­களில் தனித்து போட்டி­யிட்டால் வெற்றி பெற முடி­யாது என்ற நிலை­மை­யி­லேயே மலை­யக கட்­சிகள் தேசியக் கட்­சி­க­ளுடன் கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்தி தேசியக் கட்சி சின்­னங்­க­ளி­லேயே போட்­டி­யிட்டு வந்­தன. இனி பொதுத்­தேர்­தல்­களில் தனித்து போட்­டி­யி­டு­வது குறித்த அவை சிந்­திக்க முடி­யாது.  அப்­ப­டியும் 12.5 வீதத்­துக்கு மேல் குறித்த தொகு­தி­களில் வாக்­கு­க­ளைப்­பெற வேண்­டு­மானால் எல்லா கட்­சி­களும் இணைந்து கூட்­ட­ணி­ய­மைத்து போட்டி­யிட்­டாலே வெற்­றியை பெற முடியும்.

நுவ­ரெ­லி­ய மாவட்­டத்தைத் தவிர்த்து தமிழர்கள் செறி­வாக வாழ்ந்து வரக்­கூ­டிய இரத்தின­புரி மற்றும் பதுளை மாவட்­டங்­களில் கடந்த காலங்­களில் சில மலை­யகக் கட்­சிகள் தனித்துப் போட்­டி­யிட்­டி­ருந்­தன. வெற்றி பெறக்­கூ­டிய வாக்­கு­க­ளைப்­பெற முடியாவிட்­டாலும் தேசிய பட்­டியல் ஆசனம்  ஒன்றை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய  வாக்கு வீதத்தை அவை பெற்­றி­ருந்­தன. எனினும் புதிய பிரே­ரணை அமுல்­ப­டுத்­தப்­பட்டால் குறித்த வாக்கு வீதத்தை நெருங்­கி­னாலும் 12.5 வீதத்­துக்கு மேல் பெற்­றி­ருக்­கா­விட்டால் அக்­கட்­சிகள் குறித்த தேர்­த­லி­லிருந்து நீக்­கப்­பட்­ட­தா­கவே கரு­தப்­படும்.  

  இதை சிறு­பான்மை கட்­சிகள் எவ்­வாறு அணு­கப்­போ­கின்­றன என்­பது முக்­கிய விடயம். ஏற்­க­னவே மலை­யகக் கட்­சிகள் தனித்து பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­வண்ணம் பிரிந்து நிற்­கின்­றன. பிர­தான தேசிய கட்­சி­க­ளிடம் தஞ்­ச­ம­டைந்­துள்ள இக்­கட்­சிகள் இனி எக்­கா­லத்­திலும் தனித்து போட்­டி­யிட முடி­யாத  அள­விற்கு புதிய திருத்தச் சட்டம் விளங்­கு­கி­றது. இப்­பி­ரே­ரணை கொண்டு வரப்­பட்­டமை குறித்து எந்த சிறு­பான்மை கட்­சி­க­ளி­ட­மி­ருந்தும் இது வரையில் எவ்­வித சல­னங்­க­ளையும் காண­மு­டி­ய­வில்லை.

எனினும் மறு­பக்கம் சிறு­பான்மை கட்­சிகள் ஒன்று சேர்ந்து கூட்­ட­ணி­யாக பாரா­ளு­மன்றத் தேர்தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கு­ரிய சூழ்­நி­லை­க­ளையும் குறித்த பிரே­ரணை ஏற்படுத்தியிருக்கின்றது என்­ப­தையும் இங்கு ஏற்றுக்­கொள்­ளத்தான் வேண்டும். பிரிந்து நின்று ஒரு­வ­ருக்­கொ­ருவர் மீது சேறு பூசி பழி­வாங்கும் அர­சி­யலை முன்­னெ­டுப்­பதை விட பிர­தி­நி­தித்­து­வத்தை தக்க வைத்துக் கொள்­வ­தற்­கா­கவும் சமூக நோக்கை அடிப்­ப­டை­யாகக் கொண்டும்  தமிழ் பிரதி­நி­திகள் ஒன்­றி­ணைய வேண்­டிய கால­கட்­டத்தில் இருக்­கின்­றனர்.

பல­மான அர­சாங்கம் அமைய முட்­டுக்­ கொ­டுக்க வேண்­டிய தேவை­யையும் வாக்கு வங்கி­யையும் ஒரு காலத்தில் மலை­யகக் கட்­சிகள் கொண்டிருந்தன.

இன்று அப்­ப­டி­யில்லை.
இன்று தேசிய கட்­சி­களின் சின்­னமே  இவர்­க­ளுக்கு வாக்­கு­க­ளைப்­பெற்­றுக்­கொ­டுக்­கின்­றன. ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய வாக்­கு­களை தேசியக் கட்சிகள் தமது சின்­னத்தில் பெற்­றுக்­கொள்­கின்றன. தமது மக்­களின் வாக்­கு­களை தேசியக் கட்சி­க­ளுக்கு தாரை வார்த்து கொடுக்கும் மலையகக் கட்­சிகள் அவர்கள் வழங்கும் அமைச்சர் பத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய நிலையில் இருக்­கின்­றனர்.
அந்த அமைச்­சுப்­ப­தவி தமது மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தற்கு ஏது­வாக இருக்­கின்­றதா என்­பது குறித்­தெல்லாம் யோசிப்­ப­தற்கும் கேட்­ப­தற்கும் எந்த வித அதி­கா­ர­மு­மின்றி கிடைத்­ததை வைத்­துக்­கொண்டு காலத்தை கடத்தும் செயற்­பா­டு­களே தொடர்­கின்றன.

இந்­நி­லையில், தமது பிர­தி­நி­தித்­து­வங்­களை தக்க வைத்துக் கொள்­வ­தற்கு குறித்த மாவட்­டத்தில் 12.5 வீத வாக்­கு­களை சிறு­பான்மை கட்­சிகள் பெற வேண்­டு­மானால் அவை ஒன்­றி­ணை­வதை விட வேறு வழி­க­ளில்லை. இந்த யதார்த்­தத்தை அவை என்று உண­ரப்­போ­கின்­ற­னவோ தெரி­யா­துள்­ளது.  
இதேவேளை, கொள்கை மற்றும் வேறு தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக சிறு­பான்மை  கட்­சிகள் ஒன்­றி­ணைந்து போட்­டி­யிட விரும்­பாது தொடர்ந்தம் தேசிய கட்­சி­க­ளி­டமே தஞ்­ச­ம­டைந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது கால­மெல்லாம் அடி­மை­யாக இருப்­ப­தற்கு சம­னாகும். ஏற்­க­னவே தனித்து நின்று இயங்­கு­வ­தா­லேயே பெரும்­பான்மை கட்­சி­க­ளும்­அதை தமக்கு சாத­க­மாக்­கிக்­கொண்டு  சிறு­பான்மை பிர­தி­நி­தி­களை ஆட்டி வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இதில் மலை­யகக் கட்­சிகள் மட்­டு­மன்றி முஸ்லிம் கட்­சி­களும் அடக்கம்.

மேற்­படி பிரே­ரணை பாரா­ளு­மன்ற விவா­தத்­திற்கு வரும் போது அதை எதிர்த்து   எத்­தனை தமிழ்ப் பிர­தி­நி­திகள் பேசப்­போ­கின்­றனர் , அதற்கெதி­ராக எத்­த­னைப்பேர் வாக்­க­ளிக்­கப்­போ­கின்­றனர் என்­பதை பொறுத்­தி­ருந்து பார்த்தல் அவ­சியம். 2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் அதைத்­தொ­டர்ந்து இடம்­பெற்ற பொதுத்­தேர்தல் இரண்­டிலும் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் கணிச­மான செல்­வாக்கை செலுத்­தி­யி­ருந்­தன.

  இந்­நாட்டின் ஜனா­தி­பதி ஒரு­வரை தெரிவு செய்ய வேண்­டு­மானால் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் மிகவம் அவ­சியம் என்ற கருத்தை சிறு­பான்மை அர­சி­யல்­வா­திகள் அழுத்தி கூறி வந்­தனர்.      
இந்த விவ­காரம் பெரும்­பான்மை மக்கள் மனதில் அழுத்­த­மாக பதிந்­ததன் கார­ண­மா­கவே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து வேறு வித­மான தமது பிர­தி­ப­லிப்பை காட்­டி­யி­ருந்­தனர்.
இந்­நி­லையில் இவ்­வ­ருடம் இடம்­பெ­றப்­போகும் பாரா­ளு­மன்­றத்­தேர்­தலில் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் எவ்­வ­கையில் பயன்­ப­டுத்­தப்­ப­டப்­போ­கின்­றன என்­பது குறித்து பிர­தி­நி­திகள் சிந்­திக்க வேண்டும். சிறு­பான்மை கட்­சி­களை தமது கட்­டுப்­பாட்­டிற்குள் வைத்­துக்­கொள்ள வேண்டும் என்ற நோக்­கத்­தி­லேயே மேற்­படி 21 ஆவது திருத்த யோசனை தனி நபர் பிரே­ர­ணை­யாக பாரா­ளு­மன்றில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை தமிழ்க் கட்­சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இது புதிய அர­சாங்­கத்தின் யோசனையாகவே உள்ளது.  சிறுபான்மை கட்சிகளை தனித்து இயங்க விடாது அவற்றை பலவீனப்படுத்தும் ஒரு அம்சமாகவும் இது விளங்குகிறது.

இந்நாட்டில் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்தே தமது அரசியல் பயணத்தை சிறுபான்மை கட்சிகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் தமது தனித்துவத்தை பேணவும் பாராளுமன்றில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் உரிமைகள் பற்றி பேசவும் வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதிகள் தமக்கான வாக்கு வீதத்தை கொண்டிருத்தல் அவசியம்.

தேசிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டு அமைச்சரவை பதவிகளைப் பெற்றுக்கொண்டு விட்டு தமது மக்களிடத்தே சென்று தமது கட்சியைப்பற்றியும் வரலாற்றைப்பற்றியும் பேசுவதில் அர்த்தங்கள் எதுவுமில்லை. சிறுபான்மை கட்சிகளை பலவீனப்படுத்துவதில் பெரும்பான்மை பிரதிநிதிகளும் அதிக அக்கறை காட்டுவர். ஆகவே இப்பிரேரணை விடயத்தில் தமிழ் பிரதிநிதிகள் என்ன நகர்வுகளை மேற்கொள்ளப்போகின்றார்கள் என்பது கேள்வியாகவுள்ளது.


-சி.சி.என். Virakesari

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *