கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா


கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் கரடி போக்கு விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை (23-02-2020) கல்வி நிலைய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பிற்பகல் 2.30 மணியளவில்  கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
முன்னதாக விருந்தினர்கள் மாணவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டதனை தொடர்ந்து விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் ஆரம்ப கர்தாக்களான எட்வேட் மரியதாஸ் மற்றும் தமிழ் ஐயா ஆகியோரின் நினைவுப்படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சுடரேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து
2019 ஆம்  ஆண்டு தரம் ஆறு முதல் உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் சிறந்த  மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள்,மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகளில் மாகாணம்,தேசிய மட்டத்தில் சாதித்த மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் பழைய மாணவர்களான க. கிருஸ்ணகுமார் யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர்,எந்திரி ஜெ.ஜெயசீலன் பிரதிப் பணிப்பாளர் வடிவமைப்பு வடக்கு மாகாணம், வைத்திய கலாநிதி ச. அன்ரன்   துஸ்யந்தன் மகப்பேற்றியலும், பெண் நோயியலும், மருத்துவ நிபுணர் மட்டகளப்பு போதனா வைத்தியசாலை, திருமதி க. மாலதி ஆசிரியை விபுலானந்தா கல்லூரி வவுனியா, பெ. சந்திரகுமார் உரிமையாளர் கிளி. கட்டடப்பொருட்கள் வாணிபம் கிளிநொச்சி  ஆகியோருடன்  பாடசாலைகளின்அதிபர்கள், ஆசிரியர்கள் ஏனைய கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், மாணவர்கள் என பெருமளவானவர்கள் கலந்துகொண்டனர்

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *