பல்கலைக்கழக கல்வியை கைவிட்டவர்கள் மீண்டும் அதனைத் தொடர்வதற்கு விண்ணப்பம் கோரல்

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக கற்கை நெறிகளை இடையில் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீளாவும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக் கொடுக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய சிபார்சுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னைநாள் உயர்நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் புத்திஜீவிகளைக் கொண்டதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்கப்பிக்கமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக உயர்கல்வியை கைவிட்டுச் சென்ற மாணவர்களின் வேண்டுகோளுக்கு அமையவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *