யாழ்ப்பாணத்தில் 6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறி மூட்டைகளுக்குள் 6 கிலோ கஞ்சா போதைப் பொருளை கடத்த முற்படடார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கஞ்சா போதைப் பொருள் கடத்தப்படுவதாக சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் மரக்கறிகளுக்குள் மறைத்து வைத்து கடத்த தயாராக இருந்த நிலையில் 6 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப் பொருள் ஆகியன நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கையை சங்கானை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *