சீனா பற்றி சூழ்ச்சி கருத்தின் தீய நோக்கம் என்ன?

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவுக்கு எதிரான சில மேலை நாடுகளின் சக்திகள், இந்நோய் குறித்த வதந்தியைப் பரப்பி, நோய் பரவல் தடுப்புப் பணியில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிக்குக் களங்கம் ஏற்படுத்துவதில் சுறுசுறுப்பாக உள்ளன.

எடுத்துக்காட்டாக, அமெரிக்க குடியரசுக் கட்சியின் செனிட் அவை உறுப்பினரான டோம் கெர்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கரோனா வைரஸ், வூ ஹானில் கடும் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு உயிரின வேதியியல் ஆய்வகத்திலிருந்து தான் வெளியேறியது என்று கூறினார். இந்தப் பேச்சுக்கு, ஆதாரம் எதுவும் இல்லை. இது போன்ற கட்டுக்கதைகளைக் கூறுபவர்களில் பெரும்பாலானோர் முன்பிருந்தே சீனாவுக்கு எதிரானவர்களாக இருப்பது, எளிதாகத் தெரிகிறது. அவர்களின் கருத்தில், சீனாவில் ஏற்பட்ட நோய் பாதிப்பை இரக்கமில்லாமல் பயன்படுத்தி, வேறு நோக்கத்துடன் கட்டுக்கதையைப் பரப்பி, சீனாவுக்குக் களங்கத்தை உண்டாக்கலாம். 

இது பற்றி ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆவணத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜான் ரிச்சார்ட் பில்ஜர் கூறுகையில், புதிய ரக கரோனா வைரஸ் பற்றிய செய்திகளை வெளியிட்ட போது, அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் சீனாவின் மீது போர் தொடுத்துள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

நியாயமற்ற இந்தப் போரினால் மனித குலத்தின் அறிவு மற்றும் மனசாட்சியைத் தோற்கடிக்க முடியாது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து பாடுபடும் இத்தருணத்தில், தீய நோக்கமுடைய சக்திகள் காயத்திற்கு மேலும் வலி ஊட்டுவதைப் போல, மனித இன ஒழுக்க நெறியின் அடிப்படை எல்லையைத் தாண்டியுள்ளது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *