ளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு

வவுனியா ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் இன்று (25) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வானில் திருகோணமலை நோக்கி பயணித்த 4 பெண்கள் உட்பட 9 நபர்களை இராணுவத்தினர் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த 25வயதுடைய பெண்ணொருவர் (முஸ்ஸிம்) தமிழ் இளைஞர் ஒருவனை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விடயம் கடந்த சில மாதங்களுக்கு பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதன் போது பெண்ணின் குடும்பத்தினருக்கிடையே சண்டைகள் இடம்பெற்றுள்ளது.

காதலுக்கு பெற்றோரின் எதிர்ப்பால் குறித்த பெண் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்கள் விடுதியில் தங்கிருந்து பணியாற்றி வந்துள்ளார் (அவரது வீட்டிற்கு செல்லாது). இன்று மதியம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த சில நபர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றி திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெண்ணை வலுக்கட்டாயமாக இழுப்பதினை அவதானித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர் கிளிநொச்சி இரானுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி இரானுவ தலைமையகத்தினர் வவுனியா இரானுவ தலைமையத்திற்கு தகவலை வழங்கி ஒமந்தை இரானுவ சாவடியில் குறித்த வானை மடக்கி பிடித்தனர். இதன் போது வாகனத்தில் இருந்த சாரதி உட்பட ஒன்பது நபர்களை இரானுவத்தினர் பிடித்து அவர்கள் பயணித்த வாகனத்துடன் அவர்களை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஆயர்படுத்தினர்கள்.

பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றவர்கள் பெண் உறவினர்கள் என தெரியவருவதாக தெரிவித்த ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசியூடாக பல தடைகள் தொடர்பு கொண்ட போதிலும் அது பயனளிக்கவில்லை.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *