புதிய கொரோனா வைரஸ் – வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாதுகாக்க நடவடிக்கை

புதிய கொரோனா வைரஸ் திட்டத்திற்குள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய வலயத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலன்களை பாதுகாப்பதற்காக இலங்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

புதிய கொரோனா வைரஸ் (Covit – 19) என்ற திட்டத்திற்குள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய வலயத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலன்களை பாதுகாப்பதற்காக இலங்கை குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்.

தற்பொழுது 2700 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 80,000 ற்கு மேற்பட்டோரை நோய் தொற்றுக்குள்ளாக்கிய புதிய கொரோனா வைரஸ் 44 நாடுகளில் பரவியுள்ளது.

இந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் எவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளதுடன், இந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுக்குழுவினரினால் இவர்களின் பாதுகாப்பு மற்றும் சேமநலனுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பில் தவறாது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வெளிநாட்டு தொடர்புகள் அமைச்சரினால் இந்த நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பான கண்காணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *