சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவு!

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கியமக்கள் சக்தியில்  (சமகி ஜன பலவேகய) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று முறையாக  இணைந்து கொண்டது.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து இது தொடர்பான அறிவிப்பினை செய்தனர்.

சஜித் பிரேமதாச மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கூட்டாக பங்கு கொண்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த பிரேமதாச கூறியதாவது  ,

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டணியில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூவ் ஹக்கீம்  தலைமையிலான ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரசும்  இணைந்து கொண்டுள்ளமை எமக்கு பாரிய பலமாகும். ஜனநாயகத்தை  மையமாக கொண்டு செயற்படும் கட்சிகள் தொடர்ந்தும் இந்த கூட்டணியுடன் இணைந்த வண்ணம் உள்ளன. 

அந்த வகையில்,அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ,  பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான  ஹெலஉறுமய அமைப்பினர் ,மற்றும் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  கட்சியினர்உள்ளிட்ட  பல தரப்பினர் அண்மையில்  கூட்டணியுடன்  உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்கள்  . 

கூட்டணியில் இன்னும் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் குறுகிய காலத்திற்குள் இணைந்து கொள்வார்கள். அனைத்து இன  மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கையை  அடிப்படையாக கொண்டே பொதுக்கூட்டணி செயற்படும். கூட்டணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர்  ரணில் விக்கிரமசிங்க வின் உத்தியோக பூர்வ உடன்பாட்டுடனும், கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்கமையவும் உருவாக்கப்பட்ட  சட்டபூர்வமான இந்த கூட்டணியுடன் இவ்வாறாக கட்சிகள் வந்து இணைந்து கொள்கின்றமை பாரிய  பலமாகும் என அவர் தெரிவித்தார்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *