அமெரிக்க தூதரக அரசியல் பிரிவு பிரதானிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்கிடையில் சந்திப்பு

அமெரிக்க தூதரக அரசியல் பிரிவு பிரதானிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்கிடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவின் பிரதானியான அந்தோனி எப் ரென்ஸ்சுள்ளி அவர்களுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில்  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை,ஜெனீவா விடயம், அதிகரித்த வேலையின்னை, முதலீடுகளின் தேவை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம்  கண்டறியப்படல் வேண்டும் என்பதோடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு நீதி வழங்கப்படுகின்ற அதேவேளை நட்டஈடும் வழங்கப்படல் வேண்டும் எனவும் தான் வலியுறுத்தியதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 
 கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி காணப்படுவதாகவும், இதனால் சமூக சீர்குலைவுகள் இடம்பெறுகிறது எனவும் எனவே கடந்த காலத்தில் அமெரிக்க நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள் போன்று  தொழில் வாய்ப்புகளை வழங்க கூடிய முதலீடுகள் அவசியம் என்றும் தெரிவித்தாக குறிப்பிட்டார்

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *