கிளிநொச்சியில் 700மில்லியன் ரூபாவில் புதிய நீர் சத்திகரிப்பு நிலையம் – ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சந்திரகுமார் தெரிவிப்பு


கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் உலக வங்கியின் நிதி உதவியுடன் குடிநீர் விநியோக திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது அதற்காக சுமார் 700 மில்லியன் ரூபா  பெறுமதியில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியின் குடி நீர் விநியோக திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தீர்க்கும் கூட்டம் இன்று 28-02-2020 கிளிநொச்சி மாவட்ட செயலத்தில்  இடம்பெற்றது.   கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற குழாய் வழி குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது அவ்வவ் பிரதேசங்களின்  மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்
இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் தி்ட்டத்திற்கு அமைவாக உலக வங்கியின் நிதி உதவியுடன் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடிநீ்ர் திட்டத்தினை விரைவாக மேற்கொள்வதில் உள்ள சிக்கல்கள் ஆராயப்பட்டன.இம் மாவட்டத்தின் தென்மேற்கு கிராமங்கள், யாழ் பல்கலைகழககத்தின் கிளிநொச்சி வளாகமும் அதனை சூழவுள்ள பிரதேசங்களும், கோணாவில், காந்திகிராமம்,புதுமுறிப்பு, செல்வாநகர்,ஊற்றுப்புலம், பொன்னகர்,பாரதிபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம்,   ஏனைய பிரதேசங்களான காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, கல்லாறு, உழவனூர், அதனை அண்டிய பிரேதேசங்கள், பூநகரியின்  வலைப்பாடு,வேரவில், கரியாலைநாகபடுவான், சோலை, பல்லவராயன் கட்டு, ஜெயபுரம் உள்ளிட்டபெரும்பாலான கிராமங்கள், பளையில் கிளாலி,இயக்கச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அத்தோடு குடிநீர் விநியோக திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதால் அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட நீர் தினமும் பெறவேண்டி இருப்பதனால் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் கிளிநொச்சியில் உருவாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் சில வாரங்களுக்கு முன் குடிநீர் விநியோகத்திற்கு பொறுப்பான அமைச்சர்  என்ற வகையில் பிரதமரையும், இராஜாங்க அமைச்சர் வாசதேவ நாணயக்காரவையும் சந்தித்து கலந்ரையாடியிருந்தேன் என்னுடன் இங்குள்ள அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த மாவட்ட கூட்டமும் இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.
மேலும் கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகத் திட்டத்தை தடையின்றி மேற்கொள்வதற்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கும்  தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திகுமார் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரச அதிபர் ஸ்ரீமோகன்  பளை பிரதேச செயலாளர்கள்  பிரதேச  சபையின் செயலாளர்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *