இத்தாலி ஈரான் தென்கொரியாவிலிருந்து வருபவர்களை தனிமை படுத்த இடம் தெரிவானது

வத்தளை – ஹெந்தலை தொழுநோய் வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்றுக்கான முதலாவது சிகிச்சை மத்தியநிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிவரும் ஈரான், தென்கொரியா, மற்றும் இத்தாலியிலிருந்து வருகை தருபவர்களை 14 தினங்கள் தனிமைப்படுத்தி சிகிச்சைக்குட்படுத்த இந்த மத்திய நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மத்திய நிலையத்தின் பணிகளுக்காக இலங்கை இராணுவத்தினரின் உதவி முழுமையாக பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜெனரல் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *