மீள்குடியேறிய இந்திராபுரம் கிராமத்திற்கு மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்


கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் முகமாலை இந்திராபரம் கிராமத்தில் புதிதாக மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைக்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சனிக்கிழமை பிரதேச பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திராபுரம் கிராமத்திற்கு  பச்சிலைப்பள்ளி உதவி பிரதேச செயலாளர், கிராம அலவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் காணி உத்தியோத்தர், மின்சார சபையின் பொறியியலாளர் ஆகியோருடன் விஜயம் மேற்கொண்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு.சந்திரகுமார்
புதிதாக மீள்குடியேறிய மக்கள் தாங்கள் எதிர்நோக்குகின்ற குடிநீர், வீதி புனரமைப்பு, மின்சாரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டிருந்தனர். 
இதன் போது உடனடியாக  மின்சார வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டதோடு, கிராமிய உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான 52 வீடுகள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 
அத்தோடு குடிநீர் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால்  குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அதற்குரிய மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனத் தெரிவித்த மு.சந்திகுமார். தொடர்ச்சியாக மீள்குடியேறிய மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
இதன் போது இந்திராபுரம் கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.52

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *