கொழும்பில் லைகளைப் பேசவிடுங்கள் நூல் வெளியீட்டு அரங்கு

“  மலையகம் என்ற உணர்வுடனும், உறவுடனும் ஒலிக்கும்குரல் திலகருடையது“

தெளிவத்தை ஜோசப் 


அரசியலாளரும் எழுத்தாளருமான மல்லியப்பு சந்திதிலகர் எழுதிய“மலைகளைப்பேசவிடுங்கள்”நூல்வெளியீடும் மற்றும் மூன்றுநூல்களின் அறிமுகமும் அண்மையில்  கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது. 


“சாகித்யரத்ன” தெளிவத்தைஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்தவிழாவில், வரவேற்புரையை திலகரின்மகள் ஓவியாவழங்க,  மலைகளைப் பேசவிடுங்கள், ‘சென்றுவருகிறேன் ஜென்மபூமியே’ ‘இலங்கை சிறுகதை முன்னோடி இலங்கையர்கோன்’ ‘காலம் தெளிவத்தை சிறப்பிதழ்’ ஆகியவற்றின் அறிமுகத்தைஎம். வாமதேவன் வழங்கினார்.

நூலாசிரியர்களான திலகர், தெளிவத்தைஜோசப், அரு.சிவானந்தன் ஆகிய மூவரையும் அறிந்தவர் என்றவகையில் அவரதுஉரைநூலின் உள்ளடக்கம்மற்றும் நூலாசிரியர்களின் வகிபாகம்குறித்த பதிவாகஅமைந்தது. 

நூலின்சிறப்புபிரதிகளைபாக்யாபதிப்பகஉரிமையாளரும்நூலாசிரியரின்தாயாருமானதிருமதி. பாக்கியம்உள்ளிட்டகுடும்பஉறுப்பினர்கள்அதிதிகளுக்குவழங்கினர். 


தலைமையுரைஆற்றியதெளிவத்தைஜோசப்,   “ மலைகளைப்பேசவிடுங்கள்எனஅறைகூவல்விடுக்கும்திலகர்,  மலையகஅரசியலில்புதுக்குரல். பேசவேமாட்டோம்எனகங்கணம்கட்டிக்கொண்டிருந்தஅந்தமக்களின்பிரதிநிதிகள்மத்தியில்அந்தமக்களின்பிரச்சினைகளைஅனுபவித்து, அலசிஆராய்ந்துஉரியமுறையில்பாராளுமன்றில்எடுத்துரைத்துதீர்வைத்தேடுவதில்அவர்தனித்துவம்பெறுகிறார். மலையகம்என்றஉணர்வுடனும், மலையகம்என்றஉறவுடனும்அவர்எழுப்பும்குரல்யார்இந்ததிலகர்? எனும்கேள்வியைஎழுப்பிநிற்கிறது. அவரதுபுதுக்குரல்போற்றுதற்குரியதுஎனதெரிவித்தார்.

நூல்விமர்சனஉரைஆற்றியவசந்திதயாபரன்,  “ நான்சிறுவயதில்சேர்ந்துவிளையாடியஎனபால்யசிநேகிதிஒருவர்திடீர்எனஇந்தியாசென்றுவிட்டார்.  இனி திரும்பிவரமாட்டார்என்றசெய்திஎனக்குள்பலகேள்வியைஏற்படுத்தியது. அதற்குகாரணம்சிறிமா – சாஸ்த்திரிஒப்பந்தம்எனசொல்லப்பட்டாலும்,  அதன்அர்த்தம்என்னவென்றுபின்னாளில்புரிந்தது. ஒருமுறைஇந்தியாசென்றபோதுவாகனவாடகைசாரதிஇலங்கையில்இருந்துதாயகம்திரும்பியமக்களைக்காட்டிஇவர்களைப்பாருங்கள். சிலோனில்இருந்துவந்தவர்கள்.  எம்.ஜி.ஆர்இவர்களுக்குஎல்லாவசதிகளையும்செய்துகொடுத்துள்ளார். எங்களுக்குத்தான்ஒன்றும்இல்லைஎனஅலுத்துக்கொண்டார்.

ஆனால், திலகரின்இந்தஆய்வுநூல்அவர்கள்ஒன்றும்அங்கேஅப்படிவாழவைக்கப்படவில்லைஎன்பதைஎடுத்துக்காட்டுவதாகஉள்ளது. 

மலையகத்தமிழ்மக்கள்இலங்கைக்கும்இந்தியாவுக்கும்வன்னிக்கும்எனபண்டங்களாகப்பரிமாற்றப்பட்டவரலாற்றைபல்வேறுஆவணங்களுடன்இந்தநூலிலேசேர்த்துள்ளார். எங்களுக்குஅரசியல்தெரியாதுஎன்றோவேண்டாம்என்றோஒதுங்கிக்கொள்ளமுடியாதஅளவுக்குஇலகுவானமொழிநடையில்அரசியல்விவகாரங்களைஆவணப்படுத்தியிருக்கும்நூல்இந்தமலைகளைப்பேசவிடுங்கள். இந்தநூலின்சிறப்புஅதுஉண்மையைவெளிப்படைத்தன்மையுடன்பேசுகின்றதுஎன்பதேஆகும் “ என்றார்.


விமர்சனவுரைஆற்றியஆய்வாளர்சிராஜ்மஷ்ஷூர், கவிதைநூலையும்சிறுகதைகளையும்
நாவலையும்படிக்கும்போதுநாம்உணர்ச்சிவசப்பட்டுகண்கலங்கலாம். ஆனால், திலகரின்கட்டுரைகள்அடங்கியஇந்தநூல்பலஇடங்களில்நமக்குகண்ணீரைவரவழைக்கின்றன. துயரம்தோய்ந்தஅந்தமக்களிடையேஇரண்டறக்கலந்துவாழக்கிடைத்தஅவரதுஅனுபவங்களும்அவரதுசமூகபிரக்ஞையும்அந்தமக்களின்விடுதலைகுறித்தஅவரதுஅவாவும்இந்தநூலிலேவெளிப்பட்டுநிற்கின்றன. 

இலங்கையில்ஒடுக்கப்பட்டமக்கள்கூட்டமாகஅமைந்தமலையகத்தமிழ்மக்களின்பிரச்சினைகள்தனித்துவமானவைஅதற்கானபோராட்டம்தனியானதாகஇருக்கவேண்டும்என்பதைஇந்தநூல்வலியுறுத்திநிற்கின்றது. இலங்கைத்தமிழர்களின்பிரச்சினைகள்வேறானவைஅவர்களதுசுயநிர்ணயஉரிமைக்கானபோராட்டத்திற்கானநியாயப்பாடுகள்அவர்களுக்கானதுஎன்பதனைநாம்மறுதலிக்கமுடியாது. அதேநேரம்மலையகத்தமிழ்மக்களின்பிரச்சினைகள்வேறானவை, முஸ்லிம்மக்களின்பிரச்சினைகள்வேறானவைஎன்பதும்புரிந்துகொள்ளப்படவேண்டியது. 

மலையகமக்களின்பிரச்சினைகள்என்ன? அவைஎவ்வாறுதீர்க்கப்படல்வேண்டும்என்பதுபோன்றவிடயங்களைஇந்தநூல்தாங்கிநிற்கிறது. அதேநேரம்தீர்கப்படாதிருந்தபலபிரச்சினைகளுக்குதீர்வுகண்டகாலமாக  2015பாராளுமன்றகாலத்தைதமிழ்முற்போக்குக்கூட்டணிகையாண்டதுஎன்கிறஉண்மையையும்ஏற்றுக்கொண்டாகவேண்டும். அந்தபதிவுகள்இந்தநூலிலேஇடம்பெறுகின்றன.

 1994- 2000 ஆண்டுகாலபாராளுமன்றத்தைமர்ஹூம்அஷ்ரப்எவ்வாறுதனதுமுஸ்லிம்சமூகத்துக்குபயன்படுத்திக்கொண்டாரோஅவ்வாறேகடந்தபாராளுமன்றத்தைதமிழ்முற்போக்குக்கூட்டணிபயன்படுத்திக்கொண்டது. அதில்திலகரின்வகிபாகம்அளப்பரியது. பிரதேசசபைசட்டத்திருத்தம், பிரதேசசெயலகஅதிகரிப்பு, பிரதேசசபைஅதிகரிப்பு, அதிகாரசபைஉருவாக்கம், புதியகிராமஉருவாக்கம்போன்றனஅரசியல்சாதனைகள். அத்தகையஅதிகாரசபைபற்றியவிபரமானகட்டுரையையும்இந்தநூல்தாங்கிவருவதுபலதரப்பட்டவாசகர்களையும்இலக்குவைத்துஎழுதப்பட்டதைகாட்டுகிறது. மலையகமக்களின்அரசியல்இலக்குகுறித்துஆவல்கொள்ளும்எவரும்வாசிக்கவேண்டியநூல்மலைகளைப்பேசவிடுங்கள்எனவும்குறிப்பிட்டார்.

இரண்டுவிமர்சகர்களுமேநூலில்இடம்பெற்றகூறியதுகூரல்இடம்பெற்றிருப்பதைஒருகுறையாகசுட்டிக்காட்டியஅதேவேளைபத்திரிகையில்தொடராகஎழுதியகட்டுரைகளைதொகுக்கும்போதுஇந்தத்தவறுஇடம்பெறுவதுவழமைஎன்றும்செவ்விதாக்கத்தில்கவனம்செலுத்துவதன்மூலம்இதனைத்தவிர்க்கலாம்என்றும்கருத்துதெரிவித்தனர்.

பிரதமஅதிதியாககலந்துகொண்டுஉரையாற்றியதமிழ்முற்போக்குகூட்டணியின்தலைவர்மனோகணேசன்,                               “ திலகராஜ்இத்தகையஒருநூலைஎழுதியிருப்பதுஎனக்குஆச்சரியத்தைஏற்படுத்தவில்லை. அவர்பாராளுமன்றம்வருவதற்குமுன்பேநாங்கள்ஒருவரைஒருவர்அறிவோம். அவரைமுழுநேரஅரசியலுக்குள்நாங்கள்உள்வாங்கிஇருக்காவிட்டால்இதனைவிடஅதிகளவானஆய்வுகளையும்நூல்களையும்எழுதிஇருப்பார். அதற்கானஆற்றல்அவரிடம்நிறையவேஇருக்கிறது. பாராளுமன்றில்அவரதுதுணிச்சலானஉரைகள், துடிப்பானசெயற்பாடுகள், அரசியலில்அவரதுதூரநோக்கசிந்தனைஎங்களதுபயணத்துக்குபலம்சேர்ப்பனஎன்பதில்மாற்றுக்கருத்துஇல்லை. 

எழுத்து, இலக்கியம், அரசியல், செயற்பாடுகள்எனதன்னைமலையகசமூகமேம்பாட்டுக்காகஅர்ப்பணித்துக்கொண்டகோ.நடேசய்யர்அவர்களைப்போன்றுஅரசியலில்துணிவுடன்களமிறங்கிதான்சார்ந்தமலையகசமூகத்துக்காகஎழுத்து, இலக்கியம், அரசியல்எனஅனைத்துத்தளங்களிலும்தன்னைஅர்ப்பணித்துக்கொண்டிருக்கும்திலகர்சமகாலமலையகமக்களின்மனசாட்சியாகதிகழ்கிறார். நான்தொடர்ச்சியாகஅரசியலில்இருக்கப்போவதில்லை. விடைபெறும்காலம்நெருங்கிவருவதாகஉணர்கிறேன்.அவ்வாறுவிடைபெறும்போதுஎங்களதுஇடைவெளியைநிரப்புவதற்குதிலகர்போன்றதிறமைகொண்டஇளைஞர்கள்இரண்டாம்கட்டதலைமைகளாகஎமதுஅணியில்இருக்கிறார்கள்என்பதைதமிழ்முற்போக்குகூட்டணியின்தலைவராகஉறுதியாககூறிவைக்கவிரும்புகிறேன்எனதெரிவித்தார்.

ஏற்புரையாற்றியநூலாசிரியர்திலகர்தன்னுடையநூல்வெளியீட்டுக்குஒத்துழைத்தஅனைத்துதரப்பினருக்கும்நன்றிகளைத்தெரிவித்ததுடன்முதல்பதிப்பைவெளியிட்டதமிழகத்திற்குதாயகம்திரும்பியஉறவுகள், அவ்வாறுதாயகம்திரும்பகட்டாயமாக்கப்பட்டபோதுகப்பலில்தன்கண்ணீரைகரைத்துவிட்டுச்சென்றகவிஞர்அரு. சிவானந்தனின் “சென்றுவருகிறேன்ஜென்மபூமியே” கவிதையைஅறிமுகம்செய்தஅந்தனிஜீவா, அந்தநூலின்மறுபதிப்புக்கானதேவைஅதைதான்பொறுப்பேற்றுச்செய்தவிதம்ஆகியவற்றையும்நினைவுகூர்ந்தார்.

மலையகஅதிகாரசபைஉருவாக்கத்தில்எம்.வாமதேவனின்பங்களிப்பைநினைவுகூர்ந்ததுடன்அத்தகையஅதிகாரசபைபற்றியமுழுமையானவிபரம்இந்தநூலில்உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.  இளையசமூகத்தினர்முகநூலுக்குவெளியேஆற்றவேண்டியபணிகள்நிறையவேஇருப்பதாகசுட்டிக்காட்டியதுடன்நமக்குமுன்னேசென்றவர்களின்அடியொற்றிநடப்பதும்அவர்களைகனம்பண்ணுவதும்தேவைப்படும்பண்புகளாகஉள்ளனஎன்றும் “மலைகளைப்பேசவிடுங்கள்” நூல்முற்றுப்பெறாதநூல்என்றும்அதனைஅடுத்தஅத்தியாயங்களைஎழுதும்பொறுப்புஎதிர்காலமலையகசந்ததிக்குஉரியதுஎன்றும்குறிப்பிட்டார். 

நிகழ்ச்சிகளைகுரல்கலைஞரும்ஊடகவியலாளருமானபிரதாஸ்ஆக்சுஞயாசுவைபட தொகுத்தளித்தார். 

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *