சுதந்திரகட்சி யாழ் மாவட்டத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தது

இன்று (18) காலை கைலாச பிள்ளையார் கோவில் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் அலுவலகத்தில் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் மற்றைய வேட்பாளர்கள் வேட்புமனு பத்திரத்தில் கையொப்பம் இடும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்த அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் “இம்முறை மக்கள் ஆணையோடும், அங்கீகாரத்தோடும் பாராளுமன்றம் தெரிவாகி மக்களுக்கான சேவையை தொடர்வேன்” என நம்பிக்கை வெளியிட்டார். வேட்பாளர் விபரம் :

1.அங்கஜன் இராமநாதன்,

2.ஸ்ரனிஸ்லஸ் (celestine) செலஸ்ரின்,

3.சங்கரப்பிள்ளை பத்மராஜா,

4.கந்தையா தியாகலிங்கம்,

5.சிவலிங்கம் கேதீஸ்வரன்,

6.அருளானந்தம் அருண்,

7.பாலகிருஸ்ணன் முகுந்தன்,

8.பரநிருபசிங்கம் வரதராஜசிங்கம்,

9.பவதாரணி ராஜசிங்கம்,

10.ஜோசெப் பிரான்சிஸ்

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *