திரும்பிப்பார்க்கின்றேன்: தேர்தல்களும் தமிழ்எழுத்தாளர்களும் அரசியல் அதிகாரம் என்பது மக்களின் நலன்களுக்காகவே மக்களினால் தேர்தலில் தரப்படுகிறது. -முருகபூபதி

சங்ககாலத்திலிருந்து புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல்பேசி வந்தவர்கள்தான். அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும் இவர்களில், சங்ககாலப்புலவர்கள் மன்னர்களை புகழ்ந்துபாடியே வாழ்க்கையை ஓட்டினர்.

விதிவிலக்காக” மன்னவனும் நீயோவளநாடும் உனதோ…”என்று தமதுதர்மாவேசத்தை கொட்டிவிட்டு அரசவையைவிட்டுப் புறப்பட்டவர்தான் கம்பர் என்றும் சொல்லப்படுகிறது.

திருவள்ளுவரும்இளங்கோவும்அவருக்குப்பின்னர்வந்தபாரதியும்அரசியல், அறம்பற்றியெல்லாம்எழுதினார்கள்.


நவீனகாலத்துஎழுத்தாளர்கள்அரசியல்பேசியதுடன்எழுதினார்கள், அரசியல்வாதிகளாகதேர்தல்களிலும்தோன்றினார்கள். அரசியல்தலைவர்களைநம்பிஅவர்கள்பின்னாலும்சென்றார்கள்.
தமிழ்நாட்டில்காலத்தின்இடிமுழக்கம்எனகொண்டாடப்பட்டஜெயகாந்தனும்அரசியல்பேசினார், எழுதினார், ஒருஇலக்கியவாதியின்அரசியல்அனுபவங்களும்எழுதியவர். ஒருகட்டத்தில்சென்னைதியாகராயர்நகர்சட்டமன்றத்தொகுதியில்போட்டியிட்டுநாற்பதுக்கும்குறைவானவாக்குகளைப்பெற்று, தமக்குகிடைத்தவாக்குகள்அனைத்தும்அப்பழுக்கற்றவைஎன்றும்வசனம்பேசினார்.
மற்றுமொருஎழுத்தாளர்பரீக்ஷாஞாநியும்ஆம்ஆத்மிகட்சியில்இணைந்துதேர்தலில்போட்டியிட்டுதோல்வியையும்அனுபவத்தையும்புத்திக்கொள்முதலாக்கினார்.

இலங்கையிலும்பலஎழுத்தாளர்கள் – ஊடகவியலாளர்கள்தேர்தல்களில்போட்டியிட்டிருக்கின்றனர். ஒருகாலத்தில்மூத்தநாவலாசிரியர்சுபைர்இளங்கீரன்கம்யூனிஸ்ட்கட்சியின்சார்பில்யாழ்ப்பாணம்மாநகரசபைத்தேர்தலில்போட்டியிட்டவர்தான்.
பின்னாளில்மல்லிகைஆசிரியர்டொமினிக்ஜீவாவும்யாழ்.மாவட்டஅபிவிருத்திச்சபைத்தேர்தலில்போட்டியிட்டார். கடந்தசிலவருடங்களுக்குமுன்னர்நடந்தபாராளுமன்றத்தேர்தலில், யாழ்ப்பாணத்தில்மாத்திரம்எமக்குநன்குதெரிந்தநான்குஎழுத்தாளர்கள்போட்டியிட்டனர்.
அவர்கள்பெயர்பின்வருமாறு:-
எம். ஸ்ரீபதி, பேராசிரியர்சிவச்சந்திரன், செங்கைஆழியான், கவிஞர்சோ. பத்மநாதன். எனினும்இவர்கள்வெற்றிபெறமுடியவில்லை. அதன்பின்னர்நடந்ததேர்தல்களிலும்போட்டியிடவில்லை.


முன்னர்பாராளுமன்றத்திற்குகிழக்கிலிருந்துதெரிவானசெல்விதங்கேஸ்வரியும்ஒருஎழுத்தாளர்தான். அத்துடன்சமூகஆய்வாளர்.


அரசியல்வாதியாவதற்குமுன்னர் — முஸ்லிம்காங்கிரஸ்கட்சியைதொடங்குவதற்குமுன்னர்கவிஞராகத்திகழ்ந்தவர்சட்டத்தரணிஅஷ்ரப்.அவரதுகட்சிஅவர்காலத்தில்பலம்மிக்கஇயக்கமாகவேஇயங்கியது. அவர்சிறந்தஇலக்கியவாதி. இலக்கியக்கூட்டங்களில்கலந்துகொள்வதும், அவற்றில்பேசுவதும்அவருக்குஉவப்பானது. அமைச்சரானதன்பின்னரும்தினமும்ஒருகவிதைஎழுதிப்பார்த்துவிட்டுத்தான்தமதுஅரசியல்கடமைக்குச்செல்பவர். நான்அறிந்தவரையில்மல்லிகைக்குஒழுங்காகசந்தாப்பணம்செலுத்தி, வரவழைத்துபடித்தவர்.

அவரைப்போன்றுமற்றும்ஒருவர்மாவைசேனாதிராஜா, மற்றவர்அஸ்வர். ஆனால், இவர்கள்இலக்கியவாதிகளோஇலக்கியப்பேச்சாளர்களோஅல்ல.
சிலஅரசியல்வாதிகளும்கட்சித்தலைவர்களும்இலக்கியவிழாக்களில்பேசுகையில் ” எழுத்தாளன்இந்நாட்டின்முதுகெலும்பு” – என்றபாணியில்முழங்கி, கல்யாணப்பரிசு (மன்னார்அன்கம்பனி – பைரவன்) தங்கவேல்போன்றுகாற்றிலேபேசிவிட்டுச்செல்பவர்கள்.


முடிந்தால்பொன்னாடைபோர்த்துவார்கள். அல்லதுபெற்றுச்செல்வார்கள்.
முன்னர்மட்டக்களப்பின்முடிசூடாமன்னர்என்றும்சொல்லின்செல்வர்எனவும்பெயர்பெற்றிருந்தசெல்லையாஇராஜதுரைஒருகாலத்தில்சுதந்திரன்பத்திரிகையில்ஆசிரியப்பணியில்ஈடுபட்டஎழுத்தாளர். அத்துடன்நாடகநடிகர். தமதுபேச்சாற்றலினால்தந்தைசெல்வாவினால்கவரப்பட்டுஅரசியலுக்குவந்தவர். நீண்டகாலம்மட்டக்களப்பைபிரதிநிதித்துவப்படுத்தியவர்.
இவர்தமதுவாழ்க்கைத்தொழிலைஎழுத்துலகத்திலிருந்துதொடக்கியிருந்தமையினால்அமைச்சரானதும்ஈழத்துஎழுத்தாளர்களுக்கும்இலக்கியஉலகிற்கும்ஏதும்உருப்படியாகசெய்வார்என்றுதான்எதிர்பார்த்தோம். அவர்தேர்தல்களில்இறங்கும்முன்னர்சொந்தமாகஒருஅச்சகமும்நடத்திஒருஇலக்கியஇதழைவெளியிட்டவர்தான்.
ஆனால், அவர்அமைச்சரானதன்பின்னர்நடந்ததுவேறு. அவர்தம்மைஆன்மீகவாதியாக்கிக்கொண்டு, அஸ்வமேதயாகமும்இந்துக்கலாசாரமாநாடும்தான்நடத்தினார்.

ஈழத்துஎழுத்தாளர்களின்நூல்களைவிநியோகிப்பதற்குசீரானசெயல்திட்டத்தைஅவர்உருவாக்கவேண்டும்என்றுஇலங்கைமுற்போக்குஎழுத்தாளர்சங்கம்தனதுவெள்ளிவிழாவின்பொழுதுஅவரைஅழைத்துமுன்வைத்தகோரிக்கையைமட்டுமல்ல, பலஇலக்கியம்சார்ந்தவேண்டுகோள்களையும்அவரால்நிறைவேற்றமுடியாமல்போய்விட்டது.


ஒருசமயம்கொழும்புதப்ரபேன்ஹோட்டலில்நடந்தஒருஇளம்கவிஞரின்கவிதைநூல்வெளியீட்டுவிழாவுக்குஅவர்தான்தலைமைதாங்கினார். அதில்கலந்துகொண்டஒருமுஸ்லிம்கவிஞர் , அவரைப்புகழ்ந்துபேசும்பொழுது, “அமைச்சருக்குஇரண்டுமனைவிகள். அதில்ஒன்றுதமிழ் ”எனச்சொல்லிகரகோஷம்பெற்றுச்சென்றார்.
அமைச்சரும்கரகோஷம்எதிர்பார்த்தோஎன்னவோ, ” இன்றுதமதுகன்னிப்படைப்பானகவிதைநூலைவெளியிடும்கவிஞர்நாளையேதமதுநூலில்100 பிரதிகளைஎனதுஅமைச்சில்கொடுத்துவிட்டுஅதற்குரியகாசோலையைவாங்கிச்செல்லவும்.  “என்றார்.
நாமெல்லோரும்புளகாங்கிதம்அடைந்தோம். ஆகாஎமக்குஒருவிடிவெள்ளிதோன்றியிருக்கிறதுஎனநினைத்தோம். அந்தக்கவிஞரும்அமைச்சர்சொன்னவாறுமறுநாளேதமதுநூலின்பிரதிகளைஅமைச்சில்சேர்ப்பித்தார். அதன்பின்னர்தமதுகால்செருப்புதேயத்தேயஅலைந்தாரேயன்றிஅந்தக்காசோலைகிடைக்கவில்லை.

தமிழ்த்தேசியம் , தமிழ்ஈழம், சமஷ்டிஎன்றெல்லாம்காலந்தோறும்பேசிவந்ததமிழரசுக்கட்சித்தலைவர்களும்தமிழ்க்காங்கிரஸ்கட்சித்தலைவர்களும்கூடஈழத்துஇலக்கியஉலகிற்குஉருப்படியாகஏதும்செய்யவில்லை.
ஆனால், தெருத்தெருவாகமல்லிகையைசுமந்துகொண்டுஅலைந்தமல்லிகைஜீவாமாஸ்கோவிடம்பணம்வாங்கிக்கொண்டுஇதழ்நடத்துகிறார்என்றுகோவைமகேசன்சுதந்திரனில்விஷம்கக்கினார்.


சுதந்திரனும்பின்னாளில்சுடர்ஒளிஎன்றஇலக்கியஇதழைநடத்தியது. அதனையும்இந்ததமிழ்த்தேசியவாதிகள்கண்டுகொள்ளவில்லை. அவர்கள்சுதந்திரனுக்கும்சுடரொளிக்கும்போட்டியாகஉதயசூரியன்என்றபத்திரிகையைநடத்தினார்கள்.

ஆனால், அதுதொடர்ந்துவெளியாகவில்லை.
மலையகத்தில்நடந்ததும்தெரிந்தவிடயம்தான். மலையகதோட்டத்தொழிலாளர்களின்சந்தாப்பணத்தில்வாழ்ந்தஇ.தொ.காமற்றும்ஜனநாயகதொழிலாளர்காங்கிரஸ்என்பனவும்ஈழத்துமலையகஇலக்கியவளர்ச்சிக்குஎதனையும்உருப்படியாகச்செய்யவில்லை.


அஸீஸ்தலைவராகஇருந்தஜனநாயகதொழிலாளர்காங்கிரஸ், ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சியையும்தொண்டமான்தலைமைதாங்கியஇ.தொ.கா. ஆரம்பத்தில்யூ. என்.பி. யையும்ஆதரித்துதமக்குஅந்தகட்சிகள்பதவியில்அமரும்வேளைகளில்நியமனஅங்கத்தவர்பதவியைதேர்தலில்போட்டியிடாமலேயேபெற்றுக்கொண்டனர். விகிதாசாரப்பிரநிதித்துவம்வரும்வரையில்இந்தக்காட்சிதான்தொடர்ந்தது.


1977 இல்ஜே.ஆர். தலைமையில்அரசுஅமைந்தபொழுதுசௌமியமூர்த்திதொண்டமான்அமைச்சரானார். அவர்மீதுநம்பிக்கைவைத்திருந்தமலையகஇளைஞர்களின்ஆதர்சமாகவிளங்கியஇர. சிவலிங்கம்மலையகமக்களுக்கானஒருஅறிஞர்குலாம்அமைக்கஅமைச்சர்முன்வரவேண்டும்என்றுவீரகேசரியில்கட்டுரைஎழுதினார்.
தோட்டத்தொழிலாளர்களின்சந்தாப்பணத்தில்நம்பிக்கைவைத்திருந்தஅந்தமலையகத்தலைவர்இந்தஅறிவுஜீவிகளைஎன்றைக்கும்அண்டியதில்லை. நம்பியதில்லை.

அவர்தோட்டத்தொழிலாளர்களைமகிழ்ச்சிக்கடலில்ஆழ்த்துவதற்காகஇ.தொ.கா. வின்வருடாந்தமாநாட்டுவிழாவுக்காகதமிழ்நாட்டிலிருந்துநடிகர்கள்ஜெமினிகணேசன், நாகேஷ், நடிகைசுஜாதாவைவரவழைத்தார்.
தோட்டமக்களின்சந்தாப்பணம்இந்நடிகர்கள்தங்கியிருந்தஉல்லாசவிடுதிகளுக்குகரைந்தது. அவர்காலத்தில்வாழ்ந்தவர்தான்ஒருகூடைக்கொழுந்துபுகழ்என்.எஸ்.எம். இராமையாஎன்றமூத்தமலையகஎழுத்தாளர்.


வறுமையில்மிகவும்சிரமப்பட்டார். 1983 இல்தமதுஇரண்டுகுழந்தைகளைநோய்அரக்கனுக்குஒருவாரகாலத்தில்பறிகொடுத்தார். இத்தனைக்கும்அவரதுதலைமையில் 1972 இல்அட்டனில்நடந்தமலையகஎழுத்தாளர்மாநாட்டில்நியமனஅங்கத்தவர்களாகஇருந்தஅஸீஸ்மற்றும்அமைச்சர்குமாரசூரியரும், பின்னர்கொழும்புதப்ரபேன்ஹோட்டலில்நடந்தஒருகூட்டத்தில்அமைச்சர்கள்தொண்டமானும்தேவராஜூம்பேசியிருக்கிறார்கள்.
வறுமையில்வாடியஅந்தமூத்தஎழுத்தாளரின்நூல்கூடைக்கொழுந்து.

தற்பொழுதுலண்டனில்வதியும்எழுத்தாளர்மு.நித்தியானந்தன்இல்லையென்றால்இந்நூல்வெளிவந்திருப்பதற்குவாய்ப்பேஇல்லை.
இராமையாஇறந்தபின்னர்அவர்வசித்தபகுதிக்குமலையகஅரசியல்பிரமுகர்கள்வந்துகுவிந்தார்கள். அஞ்சலிசெலுத்தினார்கள்.
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்அரசியலில்இறங்கிதேர்தலில்நின்றால்ஏதும்நன்மைகள்வாழ்வில்சிரமப்படும்எழுத்தாளர்களுக்கும், இலக்கியஉலகிற்கும்கிடைக்கும்எனநம்புவதுமோட்டுத்தனம்தான்.
இதுவிடயத்தில்இலங்கையில்நான்அறிந்தவரையில்இரண்டுமுஸ்லிம்அரசியல்வாதிகள்எப்பொழுதும்எழுத்தாளர்கள்பக்கம்நின்றுஅவர்களின்நலன்களைகவனித்தவர்கள்எனச்சொல்லமுடியும். ஒருவர்கொல்லப்பட்டகவிஞர்அஷ்ரப். மற்றவர்அஸ்வர்.
இன்றைக்கும்இந்தியமத்தியஅரசின்தமிழ்நூல்இறக்குமதிக்கொள்கைபற்றிதமிழ்நாட்டுஅரசியல்வாதிகளும்இலங்கைதமிழ்முஸ்லிம்அரசியல்வாதிகளும்தெரியாதவர்களாகவேஇருக்கின்றனர்.


தமிழகநூல்களைஇலங்கையில்நூல்விற்பனையாளர்கள்இறக்குமதிசெய்யமுடியும். ஆனால், தமிழகநூல்விற்பனையாளர்களினால்இலங்கையிலிருந்துஅவ்வாறுநூல்களைகொள்வனவுசெய்யமுடியாது.


இன்றுபலபதிப்பகங்களேசென்னையில்வருடாந்தம்புத்தகசந்தையில்வெளியிடஇலங்கையர்களின்நூல்களைஅச்சிடுகின்றன. புலம்பெயர்ந்தபலஎழுத்தாளர்களும்இதுவிடயத்தில்தமிழகபதிப்பகங்களையும்புத்தகசந்தையையும்நம்பியிருக்கிறார்கள்.
இன்றுஇலங்கையில்யாழ்ப்பாணத்திலிருந்துஜீவநதியும்கொழும்பிலிருந்துஞானமும்மட்டக்களப்பிலிருந்துமகுடமும்வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இலங்கைவடக்கு – கிழக்கில்இயங்கும்மாகாணசபைகள், பிரதேசசபைகள், மாநகரசபைகள், நகரசபைநூல்நிலையங்களுக்குஇவற்றில்அங்கம்வகிக்கும்தமிழ், முஸ்லிம்அரசியல்வாதிகள்இந்தஇதழ்களைகொள்வனவுசெய்வதற்குஆக்கபூர்வமாகநடவடிக்கைஎடுப்பார்களா…?


அண்மையில்நடந்துள்ளபாராளுமன்றத்தேர்தலிலும்சிலஎழுத்தாளர்கள் – ஊடகவியலாளர்கள்போட்டியிட்டனர். மலையகத்தில்வீரகேசரிமுன்னாள்ஆசிரியர்தேவராஜ், சக்திதொலைக்காட்சிமின்னல்நிகழ்ச்சிபுகழ்ரங்கா, மற்றும்கலை, இலக்கியவாதிமல்லியப்பூசந்திதிலகர்எனஅழைக்கப்படும்திலகராஜன், ஆகியோரும்யாழ்ப்பாணத்தில்வல்வைஅனந்தராஜ்என்றஎழுத்தாளரும்போட்டியிட்டனர். அனந்தராஜ்ஆசிரியராகவும்பின்னர்நகரசபையில்மேயராகவும்இருந்தவர்.


இவர்களில்ரங்காஅரசியல்விமர்சகராகமின்னலைபரபரப்புக்காகநடத்தியவர். ஏற்கனவேபாராளுமன்றத்திற்கும்தெரிவானவர்.
இவர்கள்மத்தியில்மல்லியப்புசந்திதிலகருக்குஇதுவேமுதலாவதுபாராளுமன்றஅரசியல்பிரவேசம். புதியதலைமுறை. இவரிடமிருந்துஈழத்துஇலக்கியஉலகம்குறிப்பாகமலையகஇலக்கியஉலகம்எதிர்பார்க்கிறது.
மலையகத்தில்வட்டகொடபிரதேசத்தில்வடக்குமெதகொம்பரதோட்டத்தில் 1973 ஆம்ஆண்டுபிறந்தமயில்வாகனம்திலகராஜன்கொழும்புபல்கலைக்கழகத்தில்பயின்றமுகாமைத்துவபட்டதாரி.
மல்லியப்புசந்திஎன்பதுஇவரதுகவிதைத்தொகுதியின்பெயர். தனியார்துறையில்முகாமைத்துவஆலோசகராகபணியாற்றியவாறுமலையகம்இணையத்தளம்நடத்திவருபவர். இதன்பூர்வாங்கதொடக்கநிகழ்வுஅண்மையில்கொழும்பில்நடந்தது.
ஈழத்துஎழுத்தாளர்களின்நண்பர். அவருக்குஈழத்துஇலக்கியவரலாறுபுதியதல்ல.

மலையகமக்களின்இழப்புகளும்ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்தெரியாதசெய்திகள்அல்ல. இந்தப்பத்திஎழுதும்பொழுதுஅவருடன்தொலைபேசியில்தொடர்புகொண்டுஅவர்தெரிவானதற்குவாழ்த்துக்கூறுகையில், தான்தனதுகடமைகளைதொடர்ந்தும்தமதுமக்களுக்குமேற்கொள்ளவிருப்பதாகவேஉறுதியளித்தார்.
அரசியல்அதிகாரம்என்பதுமக்களின்நலன்களுக்காகவேமக்களினால்தேர்தலில்தரப்படுகிறது. அத்தகையஜனநாயகஉலகில்நாம்வாழ்கின்றோம்.


இம்மக்களினதும்அரசியல்தலைவர்களினதும்தேசங்களினதும்வரலாறுகளையும்பதிவுசெய்துகொண்டிருப்பவர்கள்எழுத்தாளர்களும்ஊடகவியலாளர்களும்தான்.

( பிற்குறிப்பு:   கடந்தஇலங்கைபாராளுமன்றபொதுத்தேர்தலின்முடிவின்பின்னர்எழுதப்பட்டகட்டுரை.  இந்தப்பதிவின்இறுதியில்இடம்பெறும்மல்லியப்புதிலகர்என்றமயில்வாகனம்திலகராஜனுக்குஅடுத்துவரும்தேர்தலில்போட்டியிடுவதற்குவாய்ப்புவழங்கப்படாமல், தேசியப்பட்டியலில்உள்வாங்கப்பட்டுள்ளார்.  அதற்கானவிளக்கத்தைஇத்துடன்இணைத்துள்ளகாணோளிநேர்காணலில்தெரிவிக்கின்றார். )


letchumananm@gmail.com

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *