நான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து இன்று (26) 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவ தடுப்பு மருந்து சேவை பொது சுகாதார நிபுணத்துவ துணை இயக்குனர் வைத்தியர் கேணல் சவீன் சேமகே தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழகம் மற்றும் மீயான்குளம் இராணுவ முகாம் ஆகிய கொரோனா தடுப்பு முகாமில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலையில் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இன்று இடம்பெற்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை மக்களை கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் வைத்து சிகிச்சைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது.

இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்னும் 33 நாட்களின் பின்னர் அனைவருரையும் தங்களின் குடும்பங்களுடன் இணைக்கும் பணி இடம்பெறும்.

கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்களை சிறந்த முறையில் கவனித்து பரிசோதனைகள் சிகிச்சைகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.

கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்கள் 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு திருப்தி இன்மை ஏற்பட்டால் மீண்டும் ஐந்து நாட்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறும். அத்தோடு சுகாதார திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் பின்னர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பின்னர் விடுவிப்பு செய்யப்படுகின்றனர்.

புனாணை மட்டக்களப்பு பல்கலைக் கழக கொரோனா தடுப்பு முகாமில் இருந்து நான்கு பஸ்கள் மூலமாக 125 பேரும், மியான்குளம் இராணுவ தடுப்பு முகாமின் கொரோனா தடுப்பு முகாமில் இருந்து ஒரு பஸ் மூலமாக 18 பேருமாக 143 பேர் இன்று காலை 08.00 மணியளவில் நிட்டம்புவ, கொழும்பு, குருநாகல், காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே கொரோனா வைரஸின் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *