10 ஆயிரம் ரூபா சமூர்த்திக் கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் மக்கள்

அரசினால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கான 10 ஆயிரம் ரூபா வட்டியற்ற கடளை பெற முடியாத நிலை கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தற்பொது பரவிவருகின்ற கொவிட ; – 19 அல்லது புதிய கொரோனா வைரசைத் தடுககும் பொருட்டு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டள்ள ஜனாதிபதி விசேட செயலனி உட்பட அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.   
சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் உட்பட குறைந்த வருமானம் பெறுவோரின் பொதுவான பொருளாதார நடவடிக்கைகளை வழமை போன்று நடாத்திச்செல்வதில் கஸ்டங்கள் ஏற்படுவதனடிப்படையில் அவர்களது வருமான நிலையானது நிரந்தரமறற் நிலைக்குள்ளவதனடிப்படையில் நாளாந்த வாழ்கைத்தரத்திற்கும் தாக்கஙக் ள் ஏற்படலாம். அதற்கு தீர்வொன்றை சமுர்த்தி நிவாரணம் பெறும் கட்டாய சேமிப்பு கணக்குடையவர்களுக்கு விசேட சலுகையுடனான கடன் ஒன்றை வழங்கும் நோக்கில் சஹனபியவர – சலுகைக்கடன் திடட்ம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. என சுற்றுநிரூபம் மூலம் அறிவித்துள்ள நிலையில்
 இந்த சலுகையை கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து சமூர்த்தி பயனாளிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூர்த்தி பயனாளிகளின் கட்டாய சேமிப்பில் உள்ள பணத்தில் 80 வீதத்தினை வட்டியற்ற கடனாக வழங்குமாறு அரசு அறிவித்துள்ள கிளிநொச்சியில் சமூர்த்தி திட்டம் 2010 பின்னருக்கு ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக அவர்களது சேமிப்பில் போதியளவு கட்டாய சேமிப்பு இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனக் கூறப்படுகிறது.
ஆதாவது 2010 சமுர்த்தி பயனாளிகளில் 2 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரம் கட்டாயசேமிப்பு தொகை குறைவாக உள்ள து(காரணம் அவர்களுக்கு மாதம் 100ரூபா சேமிப்பு மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. அதனை விட புதிய பயனாளிகளுக்கான கட்டாய சேமிப்பு போதியதாக இல்லாமையால் அவர்கள் இந்த கடனை பெற முடியாதுள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சமூர்த்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன் அவர்களிடம் வினவிய போது அவரும் மேற்படி காரணங்களால் அனைவருக்கும் இக் கடனை வழங்க முடியாதுள்ளது என்பதனை  தெரிவித்ததோடு, அவ்வாறு வழங்க முடியாதுள்ளபவர்களுக்கு 1.5 வீத வட்டியில் பிரிதொரு கடன் திட்டத்தை வழங்குவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *