வாழ்வைஎழுதுதல் –அங்கம் 05 சாய்வு நாற்காலியில் தஞ்சமடைந்திருக்கும் மூத்த எழுத்தாளர்மு. பஷீர் மனிதநேயமும் போர்க்குணம்தான் என்பதை கதைகளில் சித்திரித்த இலக்கியவாதி- முருகபூபதி

எமதுநீர்கொழும்பூரில்கலை, இலக்கியவாதிகள் இணைந்து bஇலக்கியவட்டம் என்ற அமைப்பை 1975  களில் தொடங்கினோம். அதன்தலைவராக இயங்கியவர் எழுத்தாளர்மு. பஷீர். இந்த அமைப்புக்கு முன்னோடியாக எமது இல்லத்தில் வளர்மதி நூலகம் என்ற நூல்நிலையத்தையும் தொடக்கியிருந்தேன்.

வளர்மதிநூலகம் 1971 இல்மக்கள்விடுதலைமுன்னணியின்கிளர்ச்சிதொடங்கப்பட்டகாலத்தில்உருவானது. மாலையானதும்ஊரடங்குஉத்தரவுஅமுலாகிவிடும். வெளியேசெல்லமுடியாது. அக்காலத்தில்தொலைக்காட்சியும்இல்லை.

இலக்கியநண்பர்கள்மத்தியில்நூல்களைபரிமாரிக்கொள்வதற்காகவேவளர்மதிஇயங்கியது. வளர்மதிகையெழுத்துசஞ்சிகையும்நடத்தினோம்.இக்காலப்பகுதியில்மல்லிகைஆசிரியர்டொமினிக்ஜீவாவும்எங்கள்ஊருக்குவந்துஅறிமுகமானார்.

மல்லிகைநீர்கொழும்புசிறப்பிதழும்வெளியிட்டோம். அதற்குமுன்னர்எமதுமாமாமுறையானவரான அ. மயில்வாகனன்தனதுசாந்திஅச்சகத்திலிருந்துஅண்ணிஎன்றமாதஇதழைசிலமாதங்கள்நடத்தினார். அதன்முதல்இதழின்வெளியீட்டுவிழாவுக்குமட்டக்களப்புநாடாளுமன்றஉறுப்பினராகஇருந்தசெல்லையாஇராசதுரைதலைமைதாங்கினார். இந்நிகழ்ச்சியின்போதுதான்பஷீர்எனக்குஅறிமுகமானார்.

எனினும்அப்போதுநான்இலக்கியப்பிரவேசம்செய்திருக்கவில்லை. பழையபஸ்நிலையத்திற்குஅருகாமையில்அமைந்திருந்தமாநகரசபையின்பொதுநூலகத்தில்பஷீரைஅவ்வப்போதுசந்திப்பேன். அவருக்குத்தெரிந்ததொழில்பீடிசுற்றுவது. அவரதுவாப்பாகேரளத்திலிருந்துவந்தவர்.

கேரளத்தில்மிகவும்புகழ்பெற்றதொழில்தான்பீடிவர்த்தகம். இலங்கையில்அக்காலப்பகுதியில்ராஜாபீடி, யானைபீடி, கல்கிபீடி, பவுண்பீடிஎன்பனபிரபல்யம்பெற்றிருந்தன.

ராஜாபீடிதொழிற்சாலையைகேரளத்திலிருந்துவந்தவர்கள்தொடங்கியிருந்தாலும், நீதிராஜா – யானை , சின்னத்துரை – கல்கி , வடிவேல் – பவுண்என்பனஇலங்கைத்தமிழர்களினால்தொடங்கப்பட்டவை. இவர்களில்நீதிராஜாயூ. என்.பி.யின்கொழும்புமாநகரசபைஉறுப்பினராகவும்செனட்டராகவும்இருந்தவர்.

இவரதுயானைபீடித்தொழிற்சாலைக்குநீர்கொழும்பிலும்கிளைஇருந்தது. அதனைநடத்தியவர்தான்பஷீரின்வாப்பா. பஷீருக்குகேரளத்தொடர்புகள்இருந்தமையால்,  கேரளஇலக்கியங்களில்பரிச்சியம்மிக்கவர்.

இவர்தான்எனக்குவைக்கம்முகம்மதுபஷீர், தகழிசிவசங்கரன்பிள்ளை, பொற்றேகாட், கேசவதேவ்முதலானகேரளஇலக்கியவாதிகளின்படைப்புகளைஅறிமுகப்படுத்தியவர்.

அத்துடன்நான்சிறுகதைகள்எழுதத்தொடங்கியதும், அதன்மூலப்பிரதியைபடிப்பவரும்இவர்தான். நீர்கொழும்புபிரதேசகடற்றொழிலாளர்களின்பேச்சுவழக்கில்எழுதப்பட்டஎனதுஆரம்பகாலக்கதைகளைபடித்து, தொடர்ந்தும்அவ்வாறுஎழுதுமாறுஊக்கமும்தந்தவர். பிரதேசமொழிவழக்கு – மண்வாசனைமுதலானபுரிதல்களைஎனக்குள்விதைத்தவரும்பஷீர்தான்.

அவருக்குப்பின்னர்நான்எழுதத்தொடங்கியிருந்தாலும், எனதுமுதல்தொகுதிசுமையின்பங்காளிகள்நூலுக்குபதிப்புரையும்தந்துநீர்கொழும்புஇலக்கியவட்டத்தினால்வெளியிடச்செய்ததுடன், வெளியீட்டுவிழாவிலும்உரையாற்றிவாழ்த்தியவர்.

இவ்வாறு 1970 ஆம்ஆண்டுகாலப்பகுதிமுதல்இற்றைவரையில்எந்தவொருவிக்கினமும்இல்லாமல்எமக்கிடையேஇலக்கியநட்புணர்வுகடந்தஐந்துதசாப்தகாலமாகத்தொடருகின்றது.

நீர்கொழும்பு, மினுவாங்கொடை, புத்தளம், குருநாகல்எனஅவருடன்பலஇலக்கியநிகழ்ச்சிகளிலும்பங்கேற்றுபயணித்திருக்கின்றேன்.  அவரைநேரில்பார்ப்பதற்குச்சென்றால், அவரதுமடியில்பீடிஇலைகளும்அதற்குள்இடப்படும்தூளும்பரவியிருக்கும்ஒருவட்டிலும்அமர்ந்திருக்கும்.

அவரதுகைவிரல்களிலிருந்துஇயந்திரகதியில்பீடிகள்பிறந்துகொண்டிருக்கும். அந்தக்கலையழகைரசித்துக்கொண்டேஅவரிடமிருந்துஉதிரும்இலக்கியப்புதினங்களைசலிக்காமல்கேட்டுக்கொண்டிருக்கலாம்.

பஷீர்ஒருசிறந்தபீடிக்கைத்தொழில்நிபுணராகஇருந்தபோதிலும், அவரதுஉதடுகளில்பீடிஅமர்ந்துநான்பார்த்திருக்கவில்லை. அவருக்குசிகரட்புகைக்கும்பழக்கம்தான்இருந்தது.

பின்னாளில்அந்தப்பழகத்தைவிட்டுவிட்டார். அவருக்குசைக்கிள்ஓடவும்தெரியாது. நீர்கொழும்பில்நான்இருந்தபோதுஅவரைஎனதுசைக்கிளில்ஏற்றிச்செல்வதுமுண்டு. அவருக்குஇலக்கியம்மாத்திரம்தான்தெரியும்என்பதற்கில்லை. அரசியலும்பேசுவார். சிறந்தபேச்சாளர்.

அவருடையபேச்சுவன்மையால்கவரப்பட்டஎங்கள்பிரதேசஐக்கியதேசியக்கட்சிபிரமுகர்கள், அவரைதங்கள்மேடைகளுக்கும்அழைத்துக்கொள்வதுண்டு. நான்அவருக்குநேர்எதிராகஇடதுசாரிகளின்மேடைகளில்பேசிக்கொண்டுதிரிந்தேன்.

எனினும்நாமிருவரும்சந்திக்கும்போதுஇலக்கியம்தான்பேசுவோம். அதனால்எந்தவொருமுரண்பாடும்எமக்கிடையேதோன்றவில்லை. அவர்மினுவாங்கொடையில்நிரந்தரமாகியபோது, அகிலஇலங்கைமுஸ்லிம்காங்கிரஸில்இணைந்துகொண்டார். அதனால், அந்தக்கட்சியின்பிரசாரபீரங்கியானார்.

அஷ்ரப், ரவூப்ஹக்கீம்ஆகியோரின்நம்பிக்கைக்குரியவரானார்.  பஷீரின்சிறுகதைத்தொகுதிகளின்வெளியீட்டுநிகழ்வுகளில்இவர்களும்பேசுவார்கள்.

மீறல்கள் (1996) தலைமுறைஇடைவெளி (2003)நிஜங்களின்வலி (2005)இதுநித்தியம்( 2013) ஆகியசிறுகதைத்தொகுதிகளைவரவாக்கியிருக்கும்பஷீர், ஈழத்துஇலக்கியவாதிகளினால்மிகவும்நேசிக்கப்பட்டவர்.  மதிக்கப்பட்டவர்.

தலைமுறைஇடைவெளிதொகுதியைஎமதுமுகுந்தன்பதிப்பகத்தினால்அவருக்குவெளியிட்டுக்கொடுத்தேன். சென்னையில்இலக்கியநண்பர்செ.கணேசலிங்கன்அதனைஅச்சிட்டுத்தந்தார்.

அதன்முன்னுரையில்இவ்வாறுகுறிப்பிட்டிருந்தேன்:

“ இக்கதைகளில்பஷீர்என்றமனிதநேயவாதிதென்படுகிறார். சிலகதைகளில்அவர்தான்பிரதானபாத்திரமோஎன்றுநினைக்குமளவுக்குசஞ்சரித்துள்ளார். இவரதுகதாபாத்திரங்கள்மனிதர்கள்மாத்திரமல்ல. பிராணிகளும்தான். நாய் – பூனை – பாம்பு – இவைகளும்எம்மைசிலிர்க்கச்செய்கின்றன. பஷீரின்கதைகள்யதார்த்தப்பண்புகொண்டவை.

தான்வாழும்சூழலைஅநாயசமாகஇயல்போடுசித்திரிக்கின்றார். அதனால், நாமும்கதைகளினூடேஅழைத்துச்செல்லப்படுகிறோம். ஒருஎழுத்தாளனின்திறமைவாசகனின்சிந்தனையில்ஊடுருவுவதில்தான்பெரிதும்தங்கியிருக்கிறது. பஷீரின்கதைகள் – கதாமாந்தர்வாசகரிடம்பதிவாகின்றமையால், அவரதுபடைப்புஆளுமைத்திறன்துல்லியமாகதுலங்குகின்றது.

ஒருபடைப்பாளிதனதுஆக்கஇலக்கியப்படைப்பில்தன்னைமுதனிலைப்படுத்திவிடல்தகாதுஎனக்கூறும்விமர்சனனங்களைபடித்திருக்கின்றேன். அந்தவிமர்சனங்களைமாத்திரம்வைத்துக்கொண்டுபஷீரின்கதைகளைஎடைபோடமுடியாது. அளவுகோல்களுடன்இந்தக்கதைகளைஅண்டவும்முடியாது.

மனிதநேயம்கூடஒருவகையில்போர்க்குணம்தான்.  அந்தக்குணாம்சத்தைபஷீரின்ஒவ்வொருகதையிலும்காணமுடிகிறது.  “

இந்தத்தொகுதியைஅவர், சியோனிஸக்கொலைவெறிக்கெதிராய்இன்னுயிர்துறக்கும்பலஸ்தீனப்போராளிகளுக்குசமர்ப்பணம்செய்துள்ளார்.

பஷீரின்சிறுகதைகள்பற்றிபேராசிரியர்எம்.எஸ்.எம்அனஸ், அஷ்ரப், ரவூப்ஹக்கீம், மேமன்கவி, நிலாம், திக்குவல்லைகமால், மருதூர் ஏ. மஜீத், கே. எஸ். சிவகுமாரன்,  அஷ்ரப் சிஹாப்தீன், இளங்கீரன், எம். எச். எம்.ஷம்ஸ், பவுஸர், ஜவாத்மரைக்கார்முதலானோர்சிலாகித்துவிமர்சித்துள்ளனர்.

1968 ஆம்ஆண்டுபஷீரின்முதல்சிறுகதைவீரகேசரிவாரவெளியீட்டில்வெளியானது.  தனதுகதைகளுக்குதேசியரீதியிலும்சர்வதேசரீதியிலும்பரிசில்களும்,  இலங்கைஅரசின்கலாபூஷணம்விருதும்பெற்றவர்.

இலங்கைவானொலிமுஸ்லிம்சேவையில்வாழும்கதைகள்என்றநிகழ்ச்சியைசிலஆண்டுகள்தொடர்ந்துநடத்தியிருப்பவர். மல்லிகைஅட்டைப்படஅதிதியாகவும்கௌரவிக்கப்பட்டவர்.

இலங்கைசெல்லும்சந்தர்ப்பங்களிலெல்லாம்இவரையும்பார்த்துவிடுவேன். அவ்வேளைகளில்கடந்தகாலங்கள்இருவரதும்நெஞ்சிலும்அலைமோதிக்கொண்டிருக்கும்.

மல்லிகைஜீவா, நீர்கொழும்பூர்முத்துலிங்கம், தருமலிங்கன், செல்வரத்தினம், சந்திரமோகன், பவானிராஜா, நிலாம், வண. ரத்தனவன்ஸதேரோ, தேவாஆகியோர்நீர்கொழும்புஇலக்கியச்சந்திப்புகளில்கலந்துகொண்டசம்பவங்களையெல்லாம்நினைவுபடுத்திப்பேசிக்கொண்டிருப்பார்.

தற்போதுசெல்வரத்தினம்பிரான்ஸிலும்தருமலிங்கன்கனடாவிலும்தேவாஜேர்மனியிலும்நான்அவுஸ்திரேலியாவிலும்வசிக்கின்றோம்.

சிலவருடங்களுக்குமுன்னர்பார்க்கச்சென்றவேளையில்கையில்ஊன்றுகோலுடன்என்னுடன்நடைப்பயணம்வந்தார். எப்பொழுதும்இலக்கியம்பேசும்பஷீர், அவ்வேளையிலும்தனதுஊன்றுகோலைப்பற்றியவாறு, தமிழககவிஞர்வைதீஸ்வரனின்கவிதையொன்றைநினைவுபடுத்தினார்.

“நிலத்தில்ஒருதடிவிதியெனநகருகிறது,

முதுமையைவீடுவரைஇழுத்துக்கொண்டு”

இதுபற்றிகவிஞர்வைதீஸ்வரனைசிட்னியில்சந்தித்தபோதுசொன்னேன். தானேமறந்துவிட்டஅக்கவிதையைஉங்கள்ஈழத்துபடைப்பாளிநினைவில்வைத்திருக்கிறாரேஎன்றுவியப்படைந்தார்வைதீஸ்வரன்.

பஷீர்,  கடும்சுகவீனமுற்றிருப்பதாகஅறிந்து, கடந்தஅக்டோபர்மாதம்இலங்கைசென்றபோது, மீண்டும்பார்க்கச்சென்றேன்.  அப்போதுகடும்மழைக்காலம். அதனால், அவருடன்முன்புபோன்றுநடைப்பயணம்சாத்தியமில்லைஎன்பதைதெரிந்துகொண்டேஒருமாலைப்பொழுதில்மினுவாங்கொடைகள்ளொளுவைகிராமத்தில்அவரதுவீட்டைத்தேடிக்கொண்டுசென்றேன்.

பஷீர், ஒருசாய்வுநாற்காலியில்அமர்ந்தவாறு, என்னைக்கண்டதும்எழுந்திருக்கச்சிரமப்பட்டார். அவரைஅணைத்துமகிழ்ந்து, அவர்அருகிலேயேஅமர்ந்துகொண்டேன்.

எத்தனையோகதாமாந்தர்களைஉயிரும்சதையும்உணர்வுமாகசித்திரித்துநடமாடவிட்டிருக்கும்இந்தஎழுத்துக்கலைஞர், ஒருகதாமாந்தனாகவேஅந்தசாய்வுநாற்காலியில்சாய்ந்திருந்துதனதுஉடல்உபாதைகள்பற்றிசொல்லத்தொடங்கினார்.

அவரதுஅருமைமனைவியும்பிள்ளைகளும்மருமக்களும்பேரப்பிள்ளைகளும்அவரைநன்குபராமரிக்கின்றனர்.  வாழ்க்கைப்பயணத்தில்படுக்கையேநிரந்தரமாகிவிடுபவர்களுக்குசொந்தமாகஇருப்பதுஅந்தப்படுக்கையும்சாய்வுநாற்காலியும்தான்.

முன்னர்சந்தித்தவேளைகளில்இலக்கியமேபேசிக்கொண்டிருந்தவர், அன்றுதனதுநோய்உபாதைகள்பற்றியும், தன்னைவந்துபார்த்தவர்கள்பற்றியும்தான்அரற்றிக்கொண்டிருந்தார்.அவரதுமனைவிஅருகிலிருந்துஅவரதுதேவைகளைகவனிக்கிறார்.

எனக்குகண்ணதாசனின்பாடல்வரிகள்நினைவுக்குவந்தன.

 “ஆலம்விழுதுகள்போல்உறவுஆயிரம்வந்துமென்ன..?

வேர்எனநீஇருந்தாய்அதில்நான்வீழ்ந்துவிடாதிருந்தேன்“

அங்குமற்றும்ஒருஅதிசயத்தையும்கவனித்தேன். அவருடைமகளின்கணவரானமருமகன்,   ஒருதந்தையைபராமரிப்பதுபோன்றுஉடனிருந்துபணிவிடைகள்செய்கிறார்.

விடைபெறும்போது,  “பஷீர்நானா ( நாம்அவரைஅவ்வாறுதான்அழைப்போம் ) நீங்கள்கொடுத்துவைத்தவர். தைரியமாகஇருங்கள்  “எனச்சொல்லிஅவர்கைபற்றிஅணைத்துவிட்டுவிடைபெற்றேன்.

ஊன்றுகோலுடன்நடமாடியவர், சாய்வுநாற்காலியில்தஞ்சமடைந்துவிட்டார். தோப்பில்முகம்மதுமீரானின்சாய்வுநாற்காலிநாவலில்வரும்சாய்வுநாற்காலியும்ஒருமுக்கியபாத்திரம்தான்.

இன்று,  மினுவாங்கொடைகள்ளொளுவைகிராமத்தில்இரண்டுகதாபாத்திரங்கள்அவரதுவாழ்விலும்எழுதப்படுகிறது.

—0—

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *