ஜனாதிபதித் தேர்தல்: ஒரு மதிப்பீடு – கலாநிதிஅமீர் அலி,மேர்டொக் பல்கலைக்கழகம்,மேற்குஅவுஸ்திரேலியா


நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒருதிருப்புமுனையாக அமைந்துள்ளதெனின் அதுமிகையாகாது. என்றுமில்லாதவாறு முப்பத்தைந்து வேட்பாளர்கள் போட்டியிட்டு ஒருபு தியசாதனையைப் படைத்த இத்தேர்தலில், இருவரைத ;தவிர மற்றெல்லாருமே கட்டுப்பணத்தையும் இழந்தமை இன்னொரு சாதனை. கோத்தாபாய ராஜபக்ஸ 52.25 சதவீத வாக்குகளைப் பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியுள்ளார். ஆவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ 41.99 சதவீத வாக்குகளுடன் கண்ணியத்துடன் தோல்வியை ஏற்றுக்கொண்டார்.ஆனால் இது ஒருசாதாரண தேர்தல் வெற்றியோ தோல்வியோஅல்ல. குறிப்பாக, பௌத்த சிங்களமக்களைப் பொறுத்தவரை இது இலங்கை வரலாறு காணாத ஒருமகத்தான வெற்றி. இதன் மகத்துவத்தை அவர்களின் பார்வையில் உணர்ந்து கொண்டு, அதற்கேற்ப தமது எதிர்கால அரசியல் வாழ்வை சிறுபான்மை இனங்களிரண்டும் அமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
ஓவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் தத்தம் கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் பிரச்சார மேடைகளில் நின்றுவாக்காளர்களின் முன் அள்ளிவீசியபோதும் அவையெதுவுமேn பளத்த சிங்களமக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர்களின் கவனமெல்லாம் ஒரேயொரு விடயத்தைப் பற்றியதாகவே இருந்தது. அதாவது, இந்த நாட்டை ஆள்வதும் அதனைக் கட்டியெழுப்புவதும் பௌத்தர்களா? மற்றவர்களா? என்பதே அவர்களை நோக்கிய ஒரே கேள்வி. இந்தவினாவினை அவர்களின் முன் வைத்தவர்கள் பௌத்த பேராதிக்கவாதிகளும் அவர்களின் நிழலில் நின்றுகூத்தாடிய அரசியல்வாதிகளும். இந்தக் கேள்வியின் பின்னணியை விளங்குதல் அவசியம்.
சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாகதனி நாடுகோரி ஆயுதமேந்திப் போரிட்ட தமிழரணி பௌத்த சிங்களப் படைகளின்முன் 2009இல் படுதோல்விகண்டதுடன் பௌத்த சிங்கள மக்களின் மனோநிலையில் ஒருபுரட்சிகரமான மாற்றம்ஏற்பட்டது. அதாவது, சோழர்கள் இலங்கையைப் படைகொண்டு வென்ற காலந்தொட்டு 2009வரை என்றோ ஒருநாள் தமிழரின் படைகள் இலங்கையைமீண்டும் முற்றுகையிட்டுச் சிங்களமக்களை அடிமைப்படுத்தும் என்ற ஒருபீதி அம்மக்களிடையே பரம்பரைபரம்பரையாகக் குடிகொண்டிருந்தது. அந்தமனோபயத்தைப் பல சிங்கள வரலற்றாசிரியர்களும் தூபம் போட்டுவளர்த்தனர். ஆனால், அந்தப்பயம் 2009இல் முற்றாகமறைந்தது. அந்தமறைவே அந்தப்போரினால் தமிழர்களுக்கேற்பட்டமிகப்பெரும் இழப்பென்பதை ஆழ்ந்துசிந்திப்பவர் உணர்வர்.
அதனைத் தொடர்ந்து,இனிமேல் இலங்கை ஒருபௌத்தநாடு, அதுபௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தம், இங்குவாழும் மற்றயை இனத்தவரெல்லாம் குத்தைகைக்கிருக்கும் குடியானவர்களேஎ ன்ற ஒரு தீவிரவாதமனோபாவத்தை பேராதிக்கவாதிகள் விதைத்துவிட்டனர். சென்றபங்குனிமாதம் உயிர்த்த ஞாயிறன்று முஸ்லிம் மதத்துவேஷக் கும்பலொன்று அரங்கேற்றிய கொலைவெறிநாடகம் பௌத்த பேராதிக்கவாதிகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வரப்பிரசாதம். அச்சம்பவத்தைத் தொடர்ந்து ஆனிமாதம் ஏழாந் திகதிகண்டிமாநகரில் நடைபெற்ற ஒருபகிரங்கக் கூட்டத்தில் பொதுபலசேனை இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரர் இப்புதியபௌத்த சிந்தனையை வெளிப்படையாகவே கூறியதை ஊடகங்கள் வெளியிட்டிருந்ததைவாசகர்கள் படித்திருப்பர். ஆகவே பௌத்தநாட்டை பௌத்தர்களே ஆளவேண்டும். அதன் ஜனாதிபதியும், அரசாங்க அமைச்சர்களும் பொதுத் துறைநிர்வாகிகளும் பௌத்தர்களாகவே இருக்கவேண்டும், சிறுபான்மை இனங்கள் தாமாகவே இதற்கு ஒத்துழைத்தால் வரவேற்போம்,ஆனால் அவர்களை இந்தஅமைப்புக்குட் சேர்க்கவேண்டுமென்பது நியதியல்ல, என்றவாறு பேராதிக்கவாதிகளின் பிரச்சாரங்கள் பௌத்தமக்களிடையே கட்டவிழ்த்துவிடப்பட்டன. இவர்களின் பிரச்சாரங்களின் ஓர் அந்தரங்கஅம்சமாக இங்குவாழும் இரு சிறுபான்மை இனங்களும் இந்தநாட்டின் எதிரிகள், அவர்களிடமிருந்துநாட்டைப் பாதுகாக்கவேண்டும் என்றஒருகருத்தும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான ஒருபின்னணியிலேதான் கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
கோத்தாபய, சஜித் ஆகிய இரு முன்னிலை வேட்பாளர்களின் மொத்தவாக்குகளையும் மீள் பரிசீலித்தால், முதலாமவர்க்குப் பெரும்பாலான சிங்கள பௌத்தர்களும், இரண்டாமவர்க்குப் பெரும்பாலானசிறுபான்மை இனத்தவர்களும் வாக்களித்திருப்பதுதெளிவாகின்றது. இந்தமுடிவிலிருந்து, பௌத்தமக்களின் அறுதிப்பெரும்பான்மைவாக்குகளுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதி கோத்தாபய அவர்களுக்கு பௌத்த பேராதிக்கவாதிகள் தெரிவித்துள்ள ஒருமுக்கிய செய்திஎன்னவெனில் இந்தநாட்டைபௌத்தர்கள் ஆள்வதற்கு சிறுபான்மையினத்தவர் காலடியிலே மண்டியிடவேண்டியதேவையுமில்லை, அவர்களுக்குமந்திரிப் பதவிகள் வழங்கவேண்டிய அவசியமுமில்லைஎன்பதாகும். இந்தச் செய்தியின் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிந்துதானோ என்னவோபுதிய ஜனாதிபதி இதனதுபதவியேற்புவைபவத்தை வழமைபோன்று பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளின் முன்னிலையிலல்லாமல் எல்லாளனைத் தோற்கடித்தபின் துட்டகைமுனு அநுரதபுரத்தில் நிறுவியருவன்வெலிசாய ஸ்தூபியின் முன் நடத்தினார். இதனைவாசகர்கள் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
இன்னுமொரு முக்கியசம்பவமாக, ஞானசாரதேரர்,‘ந hங்கள் பௌத்தசிங்களத் தலைவரொருவரை நாட்டைப்பாதுகாக்கும் தலைவனாகத் தெரிந்துவிட்டோம். இனி பொதுபலசேனை அமைப்புக்குஅவசியம் இல்லை. ஆதலால் அதனைகலைக்கிறோம்’ என்று அறிவித்திருப்பதும் இந்தத் தேர்தல் வண்டிச் சக்கரத்தின் அச்சாணிஎதுவென்பதை தெட்டத்தெளிவாக்கியுள்ளது. இத்தனைக்கும் மத்தியில் ஜனாதிபதி அவர்கள் தனதுபதவியேற்புரையில் ‘எனக்குச் சிறுபான்மையினரின் வாக்குகள் சொற்பமேகிடைத்தபோதும் நான் அனைவரின் ஜனாதிபதி’என்று கூறியுள்ளது வெந்தமனங்களுக்குக் குளிரூட்டுகின்றது. ஆயினும்,‘ புதுத் துடைப்பம் நன்றாய்க் கூட்டும்’எனுமாப்போல் நாட் செல்லச் செல்ல இந்தமாநிலமன்னன் குடிதழீயிக் கோலோச்சுவாராஎன்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதாரச் சிக்கல்களோ அனந்தம். கட்டுரையின் நீள்வஞ்சிஅவற்றை முற்றாக விபரிக்கமுடியாது. சுருக்கமாகக் கூறின்,விஷம்போல் உயரும் வாழ்க்கைச் செலவு@ அதனால் கடன் சுமையில் அவதியுறும் எண்ணற்றகுடும்பங்கள்@தற்கொலைசெய்யவும் அவர்கள் தயாராகும் நிலை@ அரசாங்கச் செலவினங்களின் விரயமும்,வருமானப் பற்றாக்குறையும்@ ஏற்றுமதிகளின் வீழ்ச்சியும் இறக்குமதிகளின் உயற்சியும்@தேசியக் கடனின் தாங்கொணாப் பழு@ சரிந்துசெல்லும் கல்வி,சுகாதாரத் தரங்கள்@ விரிவடைந்துசெல்லும் வருமான ஏற்றத்தாழ்வு@ இத்தனைக்கும் மத்தியில் நாட்டை யேகருவறுக்கும் ஊழல்கள் என்றவாறு அபிரச்சினைகளை அடுக்கிக்கொண்டேபோகலாம். ஆதலால் துரிதமான பொருளாதாரவளர்ச்சிகாணாமல் ஜனாதிபதி உறுதியளித்தஎந்தச் சலுகைகளையும் அவரால் செய்யமுடியாதென்பதுஉறுதி.
பொருளாதார வளர்ச்சியைப்பற்றிய ஓர் உண்மையைமட்டும் இங்கு வலியுறுத்தவேண்டியுள்ளது. பொருளாதாரவளர்ச்சி என்பதுதனியேஏதோ ஒருதத்துவத்தின் அடிப்படையில் மூலவளங்களின் கூட்டுச் சேர்க்கையாலும், தொழில் நுட்பத்தாலும் ஏற்படுவதொன்றல்ல. அதன் வளர்ச்சியின் அடித்தளத்தில் மக்கள் முழுமனதுடன் இயங்குதல் வேண்டும். பொருளாதாரத்தைவளர்ப்பவரும் மக்களே,அதனால் பயனடைவதும் மக்களே. பல்லினமக்கள் வாழும் இந்நாட்டில் மற்ற இனங்களைஒதுக்கித் தள்ளிவிட்டுஓர் இனத்தால் மட்டும் பொருளாதாரத்தை வளர்க்கமுடியாது. அரசியல் போட்டிகளை வெல்லலாம்,ஆனால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பமுடியாது. எனவேநாட்டின் இன அமைதியைப் பாதுகாத்து எல்லா இனங்கiளின் ஒத்துழைப்பையும் ஒருபிரதான மூலவளமாகக ;கொண்டுசகலதுறைகளையும் திட்டமிட்டஅடிப்படையில் அணுகாமல் சிதறுண்டமுறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்க்கமுற்படுவது பிரயோசனமளிக்காது. இதனை ஜனாதிபதிஅவர்கள் முதலில் உணரவேண்டும்.
சிறுபான்மை இனங்களின் தலைவர்களும் அவசியம் உணரவேண்டியஓர் உண்மையையும் இங்குவலியுறுத்தவேண்டியுள்ளது. இந்தத் தேர்தலின் பின்னர் இலங்கையின் ஜனநாயகஅரசியல் எதிர்பாராதசிலமாற்றங்களைக் காணலாம். அதற்கான அடிப்படைகளை மேற்கொள்வதற்காகயாப்பிலே திருத்தங்களைக் கொண்டுவரஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதைஅவதானிகள் உணர்வர். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. அதாவது, இனிமேலும் இரண்டுபிரதானகட்சிகளுக்கிடையேபோட்டிஏற்படும்,அப்போதுசிறுபான்மையினரேஒருதுரும்பாகநின்றுவெற்றிதோல்வியைத் தீர்மானிக்கலாம் என்றஎண்ணத்தைக் கைவிடவேண்டும். அந்தவியூகம் இனியொருசெல்லாக்காசு. ஆகவே இனவாரியானகட்சிகளைஉருவாக்கிஅவற்றின் குடையின் கீழ் நின்றுஅரசியல் லாபம் தேடாமல் பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்தேஅரசியல் போராட்டங்களைநடத்தவேண்டியுள்ளது. இந்தமுடிவுபலருக்குக் கசப்பாக இருக்கலாம். ஆனால் சர்வதேசநிலைப்பாடுகளையும் இந்துசமுத்திர ராஜதந்திரஅரசியலையும் அதில் இலங்கையின் நிலைப்பாட்டினையும் கவனத்திற் கொண்டே இந்தமுடிவு கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மையினரின் ஆதரவில்லாமல் சிறுபான்மை இனங்கள் எந்தஉரிமையையும் பெறமுடியாது.
முடிவாகஒருவிடயம். இந்தத் தேர்தலில் மிகவும் ஏமாற்றத்தைத் தந்தஒருமுடிவுஅனுரகுமரதிசநாயக்காவின் தேசியமக்கள் சக்தியின் படுதோல்வி.அவர் வெல்வாரெனயாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும்,உண்மையிலேயேசகல இன மக்களின் சௌஜன்யத்தையும் மேம்பாட்டையும் நாட்டின் பொருளாதாரமீட்சியையும் மையமாகக் கொண்டுசில ஆக்கபூர்வமானமாற்றங்களைக் கொண்டுவரும் திட்டத்துடன் வாக்குப் பிச்சைகேட்டவர் இவ்வேட்பாளர். ஆனால் மிகச் சீற்றத்துடன் வீசிய இனவாதமதவாதப் புயலுக்குள் இவரின் கோட்டையும் சிதறடிக்கப்பட்டதுதவிர்க்கமுடியாத ஒருவிளைவு. எனினும் எதிர்வரப் போகும் பொதுத் தேர்தலில் தேசியமக்கள் சக்தியின் கரங்கள் பலப்படுத்தப்படவேண்டியதவசியம். பௌத்தஆதிக்கவாதச் சக்திகளின் பலத்தில் நின்று கொண்டுபக்கச்சார்புடனும் அநீதியானமுறையிலும் ஆட்சிசெய்யும் ஓர் அரசாங்கத்தைத்தட்டிக் கேட்கஓர் பலமுள்ளஎதிர்க் கட்சிஅவசியம். அதற்குத் தகுதியுள்ள ஒரேகட்சி தேசியமக்கள் சக்தியே. அதன் கரங்களைப் பலப்படுத்துவதுசிறுபான்மை இனங்களின் கடமை.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *