ஆதனவரியை குறைக்காமையே எதிர்த்து வாக்களிக்க காரணம் – சுயேச்சைக்குழு உறுப்பினர்கள்

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தை சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்  அனைவரும்  எதிர்த்தே வாக்களித்தோம் காரணம் அதிகரித்த வீதமாக 10 வீதமாக அறவிடப்படுகின்ற ஆதனவரியை ஐந்து வீதமாக குறைக்குமாறு நாம் பிரதான கோரிக்கையாக முன்வைத்தோம் அதனை  கரைச்சி பிரதேச சபையின் ஆளும் தரப்பான தமிழரசுக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்கள் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்
இன்று 09-12-2019 கரைச்சி பிரதேச சபையின் 2020 இற்கான வரவு செலவு திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டது. ஆதரவாக தமிழரசுக் கட்சி சிறிலங்கா சுதந்திர கட்சி ஐக்கியே தேசியக் கட்சி ஆகியவற்றின் 20 உறுப்பினர்கள் ஆதரவாகவும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள்  அமைப்பின் சுயேச்சைக் குழு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி  தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் 15 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருந்தனர். 
இதனால் மேலதி ஐந்து வாக்குகளால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் ஆதனவரி குறைப்பு செய்யவில்லை, சபையில் தனியொரு கட்சிசார்ந்த செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றமை, அதிகார துஸ்பிரயோகம், முறைகேடுகள், சபையின் செயற்பாடுகளில் எதிர்தரப்பு உறுப்பினனர்கள் புறக்கணிப்படுகின்றமை  போன்ற பல காரணிகளால் நாம்  இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கவில்லை எனத் தெரிவித்தார்

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *