இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் Dr. சத்யமூர்த்தி அவர்கள் தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு

இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் Dr. சத்யமூர்த்தி அவர்கள் தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் வைபவம் 09.12.2019 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இவருடன் இன்னொரு தமிழரான மட்டக்களப்பு மாவட்டம்  வெருகல் பிரதேச செயலர் குகநாதனே அவராகும். இவர்களைத் தவிர, மேலும் மூவர் இந்த விருதுக்குத் தெரிவு செயயப்பட்டு விருது வழங்கப்பட்டது. அந்த மூவரும் சிங்களச் சமூகத்தினைச் சேர்ந்த சேவையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் நிலை  விருதினைப் பெற்றவர் பாடசாலை ஆசிரியையான பிரியதர்சினி என்பவராவர்.

Share:

Author: Theneeweb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *