விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்துக்கு நெல்லையில் தடை


விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத்தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். 
இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில்,  2013ம் ஆண்டு ரூ.15 லட்சம் வழங்க வேண்டியது தொடர்பாக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்த வழக்கில் இன்று , நெல்லை நீதிமன்றம்  விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தை  நெல்லையில் மட்டும் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.
நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தின் உள்ள திரையரங்குகளில் ’சங்கத்தமிழன்’ படத்தை வெளியிட தடை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.