எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி


எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கதோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி

றைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். அவருக்கு ரூ. 20 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
இந்தி பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ரணாவத் ஆலோசனையால் இந்தியிலும் ‘தலைவி’ பெயரிலேயே தயாராகிறது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க அரவிந்தசாமி தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். மீசையில்லாமல் எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஏராளமான வெற்றி படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவரும் எம்.ஜி.ஆர்தான். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை பொறுப்பு ஏற்று வழிநடத்தி ஆட்சியையும் பிடித்தார். படத்துக்கான திரைக்கதையை விஜயேந்திரபிரசாத் எழுதுகிறார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.