a_Pen

முதற்பக்கம்

அதிரடி
ஆனந்தசங்கரி
ஈ.பி.ஆர்.எல்.எப்
ஈ.பி.டி.பி
ஈரஅனல்
உதயம்
கவிமலர்
தாயகம்
புளொட்
தூ
நெருப்பு
விழிப்பு
டெலோ நியூஸ் 
பி.ஈ.ஓ.ரி.சுவிஸ்
இலங்கைநெற்        மீன்மகள்
இலக்கு                   சூத்திரம்             மகாவலி          வீசுதென்றல்    உண்மைகள்            தேனகம்                    அம்மான்            தமிழ்நியூஸ்வெப்   அறிவுடன்                கிருத்தியம் பெண்ணியம் புதியபாதை     அலை                 பூர்வீகம்

Asientribune
Lines-Magahzine
Lanka Muslims
Srilankaguardian
Tamilaffairs
Sldf
The lka academic
Tamil Week
Uthr               srilankan-diaspora.org/ 
media.athirady.org/   www.srilankans.org.au

 

a_Thenee_head02

Online Newspaper in Tamil                                 Vol.8                                                           02.03.2010

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை முற்றுமுழுதாகத் தோற்கடிப்பதே, தமிழ் மக்களின் விமோசனத்துக்கான ஒரேயொரு வழியாகும்!

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

ஏப்ரல் 08ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி, நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளன. அதற்குக் காரணமில்லாமல் இல்லை. இலங்கையைப் பொறுத்தவரையில், ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டால், அவரது வாழ்க்கை பூலோக சொர்க்கமாகி விடுவதே அதன் காரணமாகும். அதற்காக ‘நாட்டைக் காப்பேன், இனத்தைக் காப்பேன், மொழியைக் காப்பேன், மதத்தைக் காப்பேன்’ என, பல்வேறு நாடகங்களை அரசியல் கட்சிகள் அரங்கேற்ற ஆரம்பித்து விடும். அதிலும் இந்த விடயத்தில் நமது (இலங்கை - இந்திய) தமிழ் அரசியல் கட்சிகளின் வீர சாகசங்களோ, சாதனைகளோ கணக்கிலடங்காதவை.
 
அந்த ‘வீர வரலாற்றின்’ தொடர்ச்சியாக, மீண்டுமொரு முறை ‘வரலாற்றுத் திருப்பமுள்ள’ தீர்ப்பை, இலங்கை பொதுத்தேர்தலில் தமக்கு வழங்கும் படி, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்டிருக்கிறார். அவர் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களைப் பார்த்துத் துணிச்சலுடன் இப்படிக் கேட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இலங்கை 1948ல் அந்நியரிடம் இருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல், தமிழர்களுக்கு தலைமை தாங்கிய அனைத்துத் தலைமைகளும் - அதாவது தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு (இது பாசிசப் புலிகள் உருவாக்கிய பினாமி அமைப்பு) என அனைத்துக் கட்சிகளுமே, தமிழ் மக்களிடம் இவ்வாறு கேட்டு பாராளுமன்றம் சென்று, தமது சொந்த நலன்களையே பார்த்து வந்துள்ளதின் ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியே சம்பந்தனின் தற்போதைய வேண்டுகோளுமாகும். இந்த சுயநல அரசியலையே தமிழ் தேசியவாதிகள் சிலர், ‘தமிழ் தேசிய விடுதலைப் போராட்ட வரலாறு’ என்றும் வர்ணித்துக் கொள்கின்றனர்.
 
கடந்த 60 வருட காலத்தில், இந்த தமிழ் கட்சிகளின் வேண்டுகோள்களை ஏற்று, ஒவ்வொரு கட்டத்திலும், தமிழ்மக்கள் தமிழ் கட்சிகளை ஏகமனதாக பாராளுமன்றம் அனுப்பித்தான் வந்துள்ளனர். 1977 பொதுத்தேர்தலின் போது, ‘தமிழீழம் அமைப்பதானால், வடக்கு கிழக்கிலுள்ள 18 பாராளுமன்றத் தொகுதிகளிலும் தம்மையே வெற்றியீட்ட வைக்க வேண்டுமென, தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் மக்களை வேண்டியது. தமிழ் மக்களும் அவ்வாறே தமிழர் விடுதலைக்கூட்டணியினரை அனுப்பி வைத்தனர். ஆனால் பாராளுமன்றம் சென்ற தமிழர் கூட்டணி உறுப்பினர்கள், தமிழீழ கோட்பாட்டைக் கைவிட்டு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன வழங்கிய, எவ்வித அதிகாரங்களும் அற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக் கொண்டனர். கடைசியில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அதைக்கூட நிறைவேற்றவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணியினரின் இந்த ஏமாற்று வேலையால் அதிருப்தி அடைந்த தமிழ் இளைஞர்கள், ஆயுதப் போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து, பின்னர் அதனால் முழுத் தமிழினத்திற்கும் வந்த பாரிய அழிவு என்னவென்பதை இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.
 
பின்னர் 1994 பொதுத் தேர்தலிலும் தமிழர் விடுதலைக்கூட்டணி, தம்மை ஏகோபித்த முறையில் பாராளுமன்றம் அனுப்பினால், தாம் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவோம் என தமிழ் மக்கள் முன்னிலையில் மண்டியிட்டு நின்றது. தமிழ் மக்களும், கூட்டணியின் ஏமாற்று வேலையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல், அவ்வாறே ஏகப் பெரும்பான்மையாக தமிழர் விடுதலைக்கூட்டணியினரை பாராளுமன்றம் அனுப்பி வைத்தனர். பாராளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர், போர் வெறி பிடித்த பாசிசப் புலிகளின் கட்டளையை ஏற்று, இலங்கையின் வரலாற்றிலேயே தமிழர்களுக்கு அதிக சுயாட்சி அதிகாரம் வழங்கி, 2000ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்த, இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை நிராகரித்தனர். இம்முறை தமிழர் விடுதலைக்கூட்டணி, எப்பொழுதும் இனப்பிரச்சினைத் தீர்வுகளைக் குழப்பி வந்த ஐக்கிய தேசியக்கட்சியுடனும், இனவாத ஜே.வி.பியுடனும் சேர்ந்து எதிர்த்து தீர்வுத் திட்டத்தை முறியடித்து, தமது பிற்போக்குவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டனர். அதுமாத்திரமின்றி, தொடர்ந்தும் பாசிசப் புலிகள் அமைப்பின் எடுபிடிகளாகவும் செயல்படத் தொடங்கினர்.
 
அதன் பின்னர், தமிழர் விடுதலைக்கூட்டணியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, அதிலிருந்து வெளியேறிய தமிழரசுக்கட்சியும், தமிழ் காங்கிரசும், புலிகளின் ஆலோசனையை முழுவதுமாக ஏற்று, புலிகளின் அழித்தொழித்தலின் பின், பயத்தின் காரணமாகவும், சுயநலம் காரணமாகவும், அவர்களிடம் சரணாகதி அடைந்த சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ என்பனவற்றுடன் இணைந்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற புலிகளின் பினாமி அமைப்பை உருவாக்கிச் செயற்பட ஆரம்பித்தனர். இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பும் கூட, கடந்த 2004 ஆண்டு பொதுத்தேர்தலில், தம்மை ஏகமனதாக பாராளுமன்றம் அனுப்பும்படி தமிழ் மக்களை வேண்டிக் கொண்டது. புலிகளின் பலமான பின்னணி ஆதரவும், தாராளமாகக் கள்ள வாக்கு மோசடியும் இடம் பெற்றதால், அவர்களில் 22 பேர் பாராளுமன்றம் செல்ல முடிந்தது. ஆனால் தமிழ் கூட்டமைப்பின் 22 பேர் பாராளுமன்றம் சென்றும் எதையாவது சாதித்தார்களா? இல்லவே இல்லை.
 
அவர்கள் செய்ததெல்லாம், ‘புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள’ என்று சொல்லவிட்டு, தாம் வெளிநாட்டு சுற்றுலாக்களில் அடிக்கடி ஈடுபட்டு, சொகுசு வாழ்க்கையை அனுபவித்தது தான். அவர்கள் இந்த ஆறு வருட காலத்தில் ஒருமுறையாவது தம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய, தமது தொகுதி மக்களிடம் சென்றது கிடையாது. புலிகளால் அப்பாவி பொதுமக்களும், மாற்றுக் கட்சிகளின் உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்ட போதும், சிறுவர்கள் பலவந்தமாக யுத்த முனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், பொதுமக்களின் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும், தமிழர்கள் வாழ்வில் புலிகளால் மொத்த ஜனநாயக வாழ்வும் அழித்தொழிக்கப்பட்ட போதும், இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் செய்யாது வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் நின்றனர். குறிப்பாக வன்னி யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது, கொடூரமான யுத்த முனையில், புலிகள் தமது பாதுகாப்புக்காக, பொதுமக்களை மனிதக் கேடயமாக வைத்திருந்த போதும், புலிகளது உத்தரவுகளை ஏற்க மறுத்தவர்களை, புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுப் படுகொலை செய்த போதும் இந்த இந்தக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளுக்கு ஓடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை ஒவ்வொரு தமிழனும் நன்கு அறிவான்.
 
அது மட்டுமா? இந்த வருட ஜனாதிபதி தேர்தலின் போது, இந்த தமிழ் கூட்டமைப்பு சம்பந்தனும், அவரது சகாக்களும் என்ன செய்தார்கள? 40 வருடங்களாக இராணுவத்தில் இருந்து, தமிழ் மக்களுக்கெதிரான இராணுவ ஒடுக்குமுறைகளுக்கெல்லாம் பாரிய பங்களிப்பை வழங்கியதுடன், வன்னி இறுதிப் போரின் போது, போர்முனையில் அப்பாவிப் பொதுமக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு சூத்திரதாரியாக இருந்த, முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை, ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும்படி, எவ்வித தயக்கமோ, கூச்சமோ இன்றி தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்டு, தமிழ் மக்களைத் தவறாக வழி நடாத்தியவர்களும் இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் தான். ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் இனவாத போர் வெறியன் பொன்சேகாவுக்கும், அவனை ஆதரித்த ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான பிற்போக்கு – பேரினவாத சக்திகளுக்கும் தகுந்த பாடம் புகட்டிய பின், மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபடவும், அதன் மூலம் விட்ட குறை தொட்ட குறையாக உள்ள தமது இனவாத, பிற்போக்கு அரசியலைத் தொடரவும், சம்பந்தன் தலைமையிலான தமிழ் கூட்டமைப்பு கோஷ்டியினர் இப்பொழுது வரிந்து கட்டிக்கொண்டு மீண்டும் புறப்பட்டுள்ளனர்.
 
இம்முறை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு புதிய கோசங்களை முழக்கமிடவும் புதிய வேசங்களைத் தாங்கவும் ஆரம்பித்துள்ளனர். தமிழ் மக்களுக்கு தமிழீழ கோரிக்கை மீதும், அதை அடைவதாகச் சொல்லி பெரும் மனித அழிவை உண்டாக்கிய புலிகள் மேலும் அளவிட முடியாத ஆத்திரம் இருப்பதை உணர்ந்து கொண்ட கூட்டமைப்பினர், தாம் ஒருபோதும் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தது கிடையாது என, முழுப் பூசனிக்காயை ஒரு கவளம் சோற்றுக்குள் மறைக்க முனைகின்றனர். அதுமாத்திரமல்ல, கடந்த பொதுத்தேர்தலில் புலிகளால் முன்னிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகி இருந்தவர்களுக்கு, இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறுகின்றனர். இதன் மூலம் தாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல, பயங்கரவாதத்திற்கு துணை போவபவர்கள் அல்ல என நிலைநாட்ட முனைகின்றனர். இவ்வளவு காலமும் புலிகளின் வாலைப் பிடித்துக்கொண்டும், ஐக்கிய தேசியக்கட்சியின் தும்பிக்கையைப் பிடித்துக் கொண்டும் செய்த பிற்போக்குவாத, அழிவுகர அரசியலை மூடி மறைக்க படாதபாடு படுகின்றனர்.
 
எனவே தான் தமிழ் மக்கள் இன்றைய அரசியல் நிலைமையையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையின் அழிவுகர அரசியலையும் அலசி ஆராய்ந்து, வரப்போகும் பொதுத்தேர்தலில் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். கடந்த 60 வருடங்களாக பிற்போக்கு தமிழ் தலைமைகள் கபட நோக்குடன் தமிழ் மக்களைப் பார்த்துச் சொன்னவற்றையெல்லாம், சரியா பிழையா என ஆராயாமல் தமிழ் மக்கள் செயற்பட்டதற்கான பலாபலன்களை, தமிழ் மக்கள் போதிய அளவுக்கு அனுபவித்தாயிற்று. இனியும் தமிழ் மக்கள் மாட்டு மந்தைக் கூட்டம் போல, திரும்பத் திரும்ப நாம் விட்ட தவறையே விட முடியாது. முதலில் இவ்வளவு காலமும் தமிழ் மக்களை ஏமாற்றி, தமது சொந்த சுயநல அரசியலை நடாத்தி வந்த, தமிழ் பிற்போக்கு (தமிழ் தேசியக்கூட்டமைப்பு) அரசியல் சக்திகளை நாம் எமது தலைமைப் பொறுப்பிலிருந்து முற்றுமுழுதாக அகற்ற வேண்டும். அதைச் செய்யாத வரை தமிழினத்துக்கு எவ்வித விமோசனமும் கிட்டப் போவதில்லை.
 
அதைச் செய்வதற்கு வரப்போகின்ற பொதுத்தேர்தல் ஒரு அரிய சந்தர்ப்பமாகும். இந்தத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பை, தமிழ் மக்கள் முற்றுமுழுதாகத் தோற்கடித்து, தமிழர் அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை, அதாவது உண்மையான ஜனநாயக அரசியல் பாதையை உருவாக்க வேண்டும். தமிழ் மக்கள் அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு ஏதுவாக, தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு இந்தத் தேர்தல் களத்தில் இறங்க வேண்டும். அதை உணர்ந்து செயற்படுவதில் அக்கறையின்றியோ, உதாசீனமாகவோ முற்போக்கு – ஜனநாயக சக்திகள் இருப்பார்களானால், அவர்களும் தமிழ் மக்களுக்கு எதிரான பாதையில் நின்றவர்களாகவே எதிர்கால வரலாறு குறித்து வைக்கும். எனவே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுவது, அனைத்து தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளினதும் வரலாற்று ரீதியிலானதும், தட்டிக் கழிக்க முடியாததுமான கடமையாகும்.

Home /Page -1 /Page-2 / Page -3 / Page-4 / Page-5 / Page-6 /Page-7 /

wanni

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கும், 1970 பொதுத் தேர்தல் முடிவுக்கும் உள்ள ஒத்த தன்மைகள்!

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தெரிவித்திருக்கு ம் செய்திதான் என்ன?